பரந்தூர் மக்களே நம்பிக்கையோடு இருங்கள்.. நாளை நமதே.. நம்பிக்கை ஊட்டும் விஜய்!!
பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள் என்று தவெக தலைவர் விஜய் நம்பிக்கை ஊட்டியுள்ளார்.
பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள் என்று தவெக தலைவர் விஜய் நம்பிக்கை ஊட்டியுள்ளார்.
சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தைக் காஞ்சிபுரம் அடுத்த பரந்தூரில் அமைக்க அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பரந்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 13 கிராமங்களில் இருந்து 5,300 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முற்றிலும் கையகப்படுத்தப்பட உள்ளது. இதனால், இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அப்போராட்டம் 1000 நாட்களைக் கடந்துள்ளது.
இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,"மண் உரிமைக்காக, வாழ்வுரிமைக்காக ஆயிரம் நாட்களைக் கடந்து அறப் போராட்டம் நடத்தி வரும் என் பாசத்துக்குரிய பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே!” என்று தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக் குழுவினர் மற்றும் கிராம மக்களை தவெக தலைவர் விஜய் ஜனவரி 20ஆம் தேதி அன்று நேரில் சென்று சந்தித்து தனது ஆதரவை வழங்கியிருந்தது நினைவு கூரத்தக்கது. இந்நிலையில் தற்போது பரந்தூர் மக்களுக்கு நம்பிக்கையூட்டி விஜய் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: போர்டிங் பாஸ் இல்லாமல் விமான நிலையத்தில் உள்ளே போகலாம்.. புதிய விதி வரப்போகிறது!