×
 

மீண்டும் பாணா காத்தாடி? சட்டவிரோதமாக காத்தாடி, மது விற்பனை? கொடுங்கையூரில் 2 பேர் கைது..!

சென்னை கொடுங்கையூர் பகுதியில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட காத்தாடி மற்றும் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வடசென்னையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக குடிசை தொழிலாக பட்டம் மற்றும் அதற்கான மாஞ்சா நூல் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. காலப்போக்கில் வடசென்னை ஏரியாவில் பட்டம் விடுவதில் யார் பெரியவர் என்பதில் கடும் போட்டி நிலவியது. தங்களது ஏரியாவில் பறந்தால் அந்த பட்டத்தை தங்களது பட்டத்தின் மூலமே அறுத்து எறியும் சம்பவங்களும் நடந்து வந்தது. பட்டம் விடுவதில் ஏற்பட்ட போட்டியால் வடசென்னையில் கொலைகளும் நடந்துள்ளது. பட்டத்தின் நூல் மற்ற பட்டத்தை அறுப்பதற்காக அதில் மாஞ்சா தடவும் பழக்கமும் அதிகரித்தது. இந்த மாஞ்சா நூல் அறுத்ததால் மரணங்களும் அதிகளவில் நிலவியது. 

கடந்தாண்டு வியாசர்பாடி பகுதியில் மாஞ்சா நூல் அறுத்து சிறுவனும், ஜிலானி என்ற பெண்ணும் காயமடைந்தனர். காயமடைந்த சிறுவனுக்கு கழுத்தில் ஏழு தையல் போடப்பட்டது. இதுபோல விபத்துகளும், கொலை சம்பவங்களும் அதிகரித்து வந்ததால் சென்னையில் மாஞ்சா நூல் காத்தாடி விடுவதற்கும், விற்பனை செய்வதற்கும் சென்னை மாநகர காவல் துறை தடை விதித்தது.

சென்னையில் மாஞ்சா நூல் மூலம் பட்டம் விடுபவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் எனவும் போலீசார் எச்சரித்திருந்தனர். இந்த நிலையில் சென்னை கொடுங்கையூர் பகுதியில் காற்றாடி பறக்கவிட்டவர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: சென்னை மீனவர்களுக்கு ஜாக்பாட்.. தங்கத்தை மிஞ்சும் மீன் விலை.. கடலில் கிடைத்த புதையல்..!

சென்னை கொடுங்கையூர் திருவள்ளுவர் சாலையில் காற்றாடி பறப்பதாக கொடுங்கையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று மதியம் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கொடுங்கையூர் திருவள்ளுவர் சாலை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நுழைந்து சோதனை நடத்தினர். அப்பொழுது அந்த வீட்டில் காற்றாடி பறக்க விட்டுக் கொண்டிருந்த ஞான பரகாஷ் (வயது 40) என்ற நபரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவரது வீட்டை சோதனை செய்தபோது 15 லேட்டாய் மாஞ்சா நூல் மற்றும் 220 காற்றாடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

இவர் தொடர்ந்து காற்றாடி விடுவதை வாடிக்கையாக வைத்திருந்ததும், மேலும் வட மாநிலங்களான மும்பை, உத்திர பிரதேசம் ஆகிய இடங்களில் நடைபெறும் காற்றாடி போட்டிகளில் கலந்துகொண்டு தொடர்ந்து காற்றாடி விடுவதை வழக்கமாக வைத்திருந்ததும் தெரிந்தது.

அவ்வப்போது வட மாநிலங்களில் இருந்து காற்றாடி மற்றும் மாஞ்சா நூல்களை வாங்கி வந்து வட சென்னையில் காற்றாடி  மற்றும் மாஞ்சா நூல்  விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து ஞான பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதை போன்று கொடுங்கையூர் அம்பேத்கர் தெரு பகுதியில் கள்ள சந்தையில் மதுபானம் விற்கப்படுவதாக கொடுங்கையூர் போலீசாருக்கு  கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கொடுங்கையூர் அம்பேத்கர் தெரு பகுதியில் போலீசார் நேற்று திடீர்  சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் இருந்து 95 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த கொடுங்கையூர் அம்பேத்கர் தெரு பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (வயது 45) என்ற நபரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவரது வீட்டிலிருந்தும் காற்றாடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: இரவில் பெண்ணிடம் அத்துமீறல்.. ரயில் நிலையத்தில் நடந்த கொடூரம்.. அச்சத்தில் பயணிக்கும் பெண்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share