போர் எதிரொலி...ஐ.நா. தீர்மானத்தை நிராகரித்தது இந்தியா!
உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகளை திரும்ப பெற வலியுறுத்தி ஐ.நா.வில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா நிராகரித்து உள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு உக்ரைன் மீது வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலை ரஷ்யா தொடங்கியது. இந்தப் போர் தொடங்கி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். மேலும் போரை முடிவுக்கு கொண்டு வர புதினும் ஜலன்ஸ்கியும் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தினார். அதுமட்டுமல்லாது அமெரிக்கா கொடுத்துள்ள ஆயுத, நிதி உதவிகளுக்காக உக்ரைனில் உள்ள அறிய தாதுக்களை அணுக அமெரிக்காவுக்கு அனுமதியும் கோரி வருகிறார்.
இதனிடையே, தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனில் இருந்து ரஷ்யப்படைகளை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமைதியான முறையில் சமூகத் தீர்வு எட்டவும், போர் பதற்றத்தை தணிக்கவும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ICC championship: கிங் கோலி ரிட்டர்ன்ஸ்.. பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம்.. மாஸ் காட்டிய இந்திய அணி.!
ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில்,193 நாடுகள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 93 நாடுகள் ஆதரவாகவும், 18 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்திய உட்பட 65 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளன.
இந்த நிலையில், அவசர அவசரமாக பல ஐரோப்பிய நாடுகள் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளன. மார்ச் 6ஆம் தேதி பெல்ஜியம் தலைநகர் ப்ரசல்ஸில், 27 ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் பங்கேற்கும் அவசர மாநாட்டை ஐரோப்பிய கவுன்சில் நடத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு துரோகம்... உளவு பார்க்க மாலத்தீவுடன் சீனா போட்ட ஒப்பந்தம்..!