தெலுங்கு, ஹிந்தி, இங்கிலீஷ் படிக்க நம்பி வாங்க..! கூவி அழைக்கும் திமுக துரைமுருகனின் பள்ளி..! போட்டு பொளக்கும் பிஜேபி..!
கதிர் ஆனந்த் எம்.பி நடத்தும் பள்ளியில், மாணவர் சேர்க்கைக்காக எடுக்கப்பட்ட விளம்பர வீடியோவை பாஜகவினர் வைரலாக்கி வருகின்றனர்.
அரசுப் பள்ளியில் மும் மொழிக் கல்வி இல்லையா? கவலை வேண்டாம் திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளியில் சேர்த்து படிக்கலாம் என பாஜகவினர் போட்டு பொளந்து வருகின்றனர்.
திமுகவினர் நடத்தும் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை விளம்பரத்துக்காக எடுக்கப்படும் விளம்பரப் படங்களில் ஹிந்தி,தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆசிரியர்கள் பேசி மாணவர்களை கவரும் வகையில் வீடியோவாக வெப்சைட்டுகளில் பதிவேற்றி இருந்த பழைய வீடியோக்களை எடுத்துப் போட்டு தற்போது பாஜகவினர் சோசியல் மீடியாக்களில் அதிகம் பரப்பி வருகின்றனர்.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழகம் வந்து மும்மொழிக் கொள்கை தொடர்பான பிரச்சனை குறித்து பேசி சென்றதில் இருந்தே தமிழகத்தில் மொழிப்போர் நடந்து வருகிறது என்ற அளவுக்கு ஆங்காங்கே போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் அரசியல் கட்சியினர் இடையே பரஸ்பர வார்த்தை போர்களும் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: குளிர்பானத்தில் மயக்க மருந்து..! ஆடைகளைக் கழற்றி வீடியோ..! இளம் பெண்ணை நாசமாக்கிய வேலூர் சம்பவம்
உச்சகட்டமாக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக இளைஞரணி செயலாளர் துணை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இடையே கடுமையான வார்த்தை போர் நடைபெற்றது இதன் உச்சமாக ஒருவருக்கொருவர் வலைதள பக்கங்களில் கெட் அவுட் மோடி,கெட் அவுட் ஸ்டாலின் என்ற வாசகங்களை ட்ரெண்டு செய்தனர்.
அரசியல் கட்சித் தலைவர்களின் வார்த்தை போர் ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் தொண்டர்களும் விடாமல் சோசியல் மீடியாக்களில் அவரவர்களுக்கு தெரிந்த கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் திமுக அமைச்சர்கள் மூத்த தலைவர்கள் எம்எல்ஏக்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி மொழி பாடம் நடத்தப்படுவதை வீடியோ ஆதாரத்தோடு ஆங்காங்கே போட்டு காட்டி வருகின்றனர். ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு சொந்தமான பள்ளியில் இந்தி மொழி கற்பிக்கப்படும் வீடியோவை எடுத்து போட்டு வேகமாக பரப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் திமுகவின் பொதுச் செயலாளரும், தமிழக அமைச்சருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் எம்பி நடத்தும் பள்ளியில் ஹிந்தி, தெலுங்கு ஆங்கிலம் கற்பிக்கப்படும் விதத்தை வீடியோவாக எடுத்து வெப்சைட்டுகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விளம்பரப் படத்தை தற்போது பாஜகவினர் வைரல் ஆக்கி வருகின்றனர்.
வேலூரை அடுத்த காட்பாடி,கிறிஸ்டியன் பேட்டையில் இயங்கி வரும் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் சிபிஎஸ்சி பள்ளியில் ஹிந்தி,தெலுங்கு, ஆங்கிலம்,தமிழ் ஆகிய மொழிகள் கற்றுக் கொடுக்கப்படுவதாகவும் அதோடு சேர்த்து நல்லொழுக்கமும் கற்றுக் கொடுக்கப்படுகிறது என்கிற வீடியோ ஒன்று கிங்ஸ்டன் பள்ளி நிர்வாகத்தால் எடுக்கப்பட்டு வலைதளத்தில் உள்ளது.
தற்போது மும்மொழிக் கொள்கை பிரச்சனையில் இந்தி வேண்டாம்,தமிழ் ஆங்கிலம் மட்டும் போதும் என திமுகவினர் கூறி வரும் நிலையில் திமுக மூத்த தலைவர்கள் நடத்திவரும் பள்ளிகளில் மட்டும் ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகள் கற்பிக்கப்படுகிறது.
ஆனால் ஏழை மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளிகளில் மட்டும் ஒரே ஒரு மொழி மட்டும் ஆங்கிலத்தோடு கற்றுக் கொடுக்கப்படுகிறது ஏழை வீட்டு பிள்ளைகள் மூன்று மொழிகள் படிக்கக்கூடாதா? என்றும் பாஜகவினர் கேள்வி எழுப்பி மீம்ஸ்கள் மூலமாக திமுகவினரை போட்டு பொளந்து வருகின்றனர்
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை...! கைதான ‘சைக்கோ நபர்’ குறித்து வெளியான பகீர் தகவல்...!