திடீரென தவெக தொண்டர் செய்த காரியம்; மிரண்டு போன விஜய் - வைரல் வீடியோ!
கோவையில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோவின்போது, உற்சாகத்தில் கேரவன் மீதேறி விஜயை நோக்கி கத்த தொடங்கிய அக்கட்சி தொண்டர்கள்
தமிழக வெற்றி கழகத்தின் முதல் பூத் கமிட்டி கூட்டம் கோவையில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. பூத் கமிட்டி கூட்டத்திற்காக சென்னையில் இருந்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனி விமானம் மூலம் கோவை சென்றடைந்தார். இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கோவை மாவட்டம் சரவணம்பட்டி அடுத்துள்ள குரும்பம்பாளையம் என்ற பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது.
தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தடைந்த விஜய்யை மேள, தாளத்துடன் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். விஜயைப் பார்த்து ஓட்டுமொத்த கூட்டத்தினரும் ஆராவாரம் செய்தனர். கட்டுக்கடங்காமல் ஆர்பரித்த தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர். தனது தொண்டர்களை நோக்கி விஜய் கட்சி துண்டை அன்புடன் வீசி எறிய அதனை அவர்கள் ஆர்வத்துடன் பிடித்துக்கொண்டனர்.
இதையும் படிங்க: முதலில் அவர் வரட்டும்.. விஜய் அரசியலுக்காக வெயிட்டிங்.. வெடி வெடிக்க காத்திருக்கும் விந்தியா..!
விஜய் தனது பிரச்சார வாகனத்தின் மேலே நின்று கையை அசைத்தபடியே கோவை விமான நிலையத்தில் இருந்து சரவணம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். வழிநெடுகிலும் சாலையின் இரண்டு பக்கங்களிலும் விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் திரளாக கூடி நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியாத ரசிகர் ஒருவர், போலீஸ் காவலையும் மீறி திடீரென அவரது வாகனத்தின் மீது ஏறினார். இதைப் பார்த்து விஜய் திடுக்கிட்ட சில நிமிடங்களிலேயே, அவரது பர்சனல் பாதுகாவலரான பவுன்சர் வாகனத்தின் மீது ஏறிய இளைஞரை கீழே இறங்க வைத்தார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
திடீரென பிரச்சார வாகனத்தின் மீது ஏறி விஜய்க்கு ஷாக் கொடுத்த தொண்டர்..!#Coimbatore | #TVK | #TVKVijay | #BoothCommittee | #Conference | #PolimerNews pic.twitter.com/Y4r23wn3gx
— Polimer News (@polimernews) April 26, 2025
இதையும் படிங்க: நண்பனின் தங்கையிடம் சில்மிஷம்... தாக்கப்பட்டார் 'விரிட்சுவல் வாரியர்' விஷ்ணு.. கதறல் வீடியோ..!