இரவோடு இரவாக ரூ.10 கோடி செட்டில்மெண்ட்? சீமானுக்கு கடைசியாக விஜயலட்சுமி விட்ட சாபம்..!
இதுதான் எனது கடைசி வீடியோ. இதை மக்கள் புரிந்து கொள்வார்கள். மீடியாக்கள் புரிந்துகொள்ளும். எனக்கு நியாயம் கிடைக்காது என்பதை நான் தெரிந்து கொண்டேன்
''சீமானுக்கு எதிராக எனக்கு நீதி கிடைக்கவில்லை, நியாயம் கிடைக்கவில்லை. இனி அவரை எதிர்த்து வீடியோ வெளியிட மாட்டேன்'' என நடிகை விஜயலட்சுமி வீடொயோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ''நேற்று உச்ச நீதிமன்றத்தில் என்ன நடைபெற்றது என்பதை மீடியாவுக்கு நான் விளக்க வேண்டும் என்று விருப்பப்படுகிறேன். நேற்று வந்த தீர்ப்பு பிரகாரம் செட்டில்மெண்ட் என்று சொன்னவுடனே, இரவோடு இரவாக சீமான், விஜயலட்சுமிக்கு 10 கோடி ரூபாய் செட்டில்மெண்ட் செய்துவிட்டார் என்று அபாண்டமாக என் மீது பழி சுமத்த ஆரம்பித்து விடுவார்கள்.
நேற்று சீமான் உச்ச நீதிமன்றத்தில் இருந்து தடை வாங்கி இருக்கிறார் அல்லவா? சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் என் சார்பாக வாதாடி 'விஜயலட்சுமி அவர் பாதிக்கப்பட்டுள்ளார்' என்று விளக்கம் சொல்லி அதன் பிறகு தானே நீதிபதி ஒரு உத்தரவு கொடுத்தார். அதே மாதிரி உச்ச நீதிமன்றத்தில் சீமான் தடைகோரியபோது என் சார்பாக யாராவது போய் ''இந்த பெண் பாதிக்கப்பட்டு இருக்கிறது சும்மா சும்மா எல்லாம் அந்தப் பெண் வழக்கு தொடுக்கவில்லை.
இதையும் படிங்க: விஜயலட்சுமி விஷயத்தில் என் வழி பெரியார் வழி... இது மட்டும் எப்படி தவறாகும்..?- உத்தரவுக்கு பிறகு உதார் விடும் சீமான்..!
மதுரை செல்லும் என்பவரை வைத்து துன்பப்படுது... அந்தப் பெண் சாகப் போய் இருக்கிறது. நேற்று வரை அந்த பெண்ணை பாலியல் தொழிலாளி என்றெல்லாம் சொல்கிறார்'' என உச்ச நீதிமன்றத்தில் எனது சார்பாக யாராவது வாதிட்டு இருக்க வேண்டுமா இல்லையா? செல்லவில்லை. ஆகையால் சீமான் அவர்கள் சொன்ன கோரிக்கையை ஏற்று உச்ச நீதிமன்றம் தடை உத்தரவை கூறியுள்ளது. இப்போது நான் என்ன கேட்கிறேன் என்றால் நான் ஏதோ சீமானிடம் பேசிவிட்டால் காசுக்காக பேசுகிறாள் என்று எல்லோரும் கூறுகிறீர்களே.
நேற்று வந்து என் சார்பாக யாரும் உச்சநீதிமன்றம் சென்று போராடவில்லை. இந்த கேள்வி கேட்கும் போது நான் என்ன புரிய வைக்கிறேன் என்றால் முந்தாநாள் நான் கதறி அழுதேன் இல்லையா? எனக்கு எந்த நீதியும் கிடைக்காது. நியாயம் கிடைக்காது. கிடைக்கவும் விடமாட்டார்கள் என்று நான் தெரிந்து கொண்டேன். இதை தாண்டி நான் எந்த போராட்டமும் பண்ண மாட்டேன். யாரும் சீமானிடம், அந்த பெண் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறது. அந்த பெண் சாபத்தை ஏற்றுக் கொள்ளாதே என்று சொல்லவில்லை. அந்த பெண்ணை எவ்வளவு முடியுமோ அசிங்கப்படுத்தி, அவளை எவ்வளவு முடியுமோ கொச்சைப்படுத்திக்கொள் என்றுதான் எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.
மீண்டும் அந்த அசிங்கத்திற்குள் இறங்கி போராட வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. இதுவரை மக்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. பாவம் விஜயலட்சுமி இப்போது கூட கேவலப்பட்டு வருகிறார் என்று மக்களும், மீடியாக்களும் புரிந்து கொள்வார்கள். நீங்கள் எல்லாம் எனக்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி. அடுத்து எந்த கம்ப்ளைன்டும் கொடுக்க வேண்டாம் என்று நான் சொல்லிவிட்டேன். நேற்று உச்ச நீதிமன்றத்தில் நான் எப்படி கைவிடப்பட்டேன் என்பதை இந்த வீடியோவில் சொல்லிவிட்டேன்.
அதன் பிறகு நான் எந்த போராட்டமும் பண்ண மாட்டேன். இதுதான் எனது கடைசி வீடியோ. இதை மக்கள் புரிந்து கொள்வார்கள். மீடியாக்கள் புரிந்துகொள்ளும். எனக்கு நியாயம் கிடைக்காது என்பதை நான் தெரிந்து கொண்டேன்'' என அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சீமானுக்கு பெரிய ரிலீஃப்..! இடைக்கால தடைவிதித்தது உச்சநீதிமன்றம்.. விரிவான தகவல்கள்