×
 

இதென்னடா விஜய்க்கு வந்த சோதனை..! திமுக சொன்னால்... பவர் ஸ்டார் சீனிவாசன் போட்ட சபதம்

ரொம்ப அமைதியாக இருந்தவர் இன்றைக்கு பார்த்தால் மேடையில் பயங்கரமாக டயலாக் பேசுகிறார்.

''2026 தேர்தலில் நான் விஜய்யை எதிர்த்து போட்டியிடுவேன்.. எனக்கும் விஜயை விட அதிகளவில் ரசிகர்கள் இருந்தார்கள்'' என  நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பரபரப்பை பற்ற வைத்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''ஜோசப் விஜய் அவர்களே... உங்களை நான் மிகவும் மதிக்கிறேன். என்னுடைய கூடப் பிறந்த தம்பி மாதிரி தான் ஒன்பதுல குரு ஆடியோ லாஞ்சில் உங்களை நான் சந்தித்தேன். நாம் இருவரும் தனியாக அரை மணி நேரம் உட்கார்ந்து பேசினோம். அப்போ நீங்கள் சொன்னீர்கள், ''எனக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், எங்கள் வீட்டில் எனது மகன் உங்களது ரசிகர்'' என்று சொன்னீர்கள். ரொம்ப அமைதியாக இருந்தவர் இன்றைக்கு பார்த்தால் மேடையில் பயங்கரமாக டயலாக் பேசுகிறார்.

களத்துக்கு வாருங்கள். களத்துக்கு வந்தால்தான் வெற்றி, தோல்வி எதையும் நிரூபிக்க முடியும். மேடையில் பேசுவது உயிரோட்டமாக இருக்க வேண்டும். ஆனால், அவர் டயலாக் மாதிரி பேசி இங்கிட்டு செல்கிறார். அங்கிட்டு செல்கிறார். வீரபாண்டிய கட்டபொம்மன் வசனம் எல்லாம் பேசுகிறார். கூட்டம் எனக்குக்கூட தான் கூடுகிறது. எனக்கு அரசியலில் ஏகப்பட்ட பேர் இருந்தார்கள். நானும் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று தீவிரமாக முயற்சி எடுத்தேன். கடைசியில் சூழ்நிலை சரியில்லாமல் அது தள்ளிப் போய்விட்டது.

இதையும் படிங்க: பிரித்தாளுவதற்காக உகாதி வாழ்த்து கூறுகிறார்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது தமிழிசை காட்டம்.!!

அதனால் எனது அருமை தம்பி விஜய் அவர்களே 2026 சட்டமன்ற தேர்தலில் அவர் எங்கே நின்றாலும் அவரை எதிர்த்து நிற்க நான் தயாராக இருக்கிறேன். அவர் தயாரா? என்று கேட்டு சொல்லுங்கள். கட்சியெல்லாம் ஆரம்பிக்க மாட்டேன். பெரிய கட்சிகள் கூப்பிட்டால் கண்டிப்பாக அங்கே செல்வேன். இல்லையென்றால் சுயேட்சையாக நின்று விஜயை எதிர்த்து போட்டியிடுவேன். அரசியலில் எதிரி கிடையாது. நண்பரும் கிடையாது. இதெல்லாம் சும்மா டயலாக்குக்காக சொல்வதுதான். 

கூட்டணிக்கு வாங்க என்றால் ஓடிப் போகப் போகிறார். இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. அவர் மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்? அவருடைய கொள்கை என்ன? அதையெல்லாம் சொல்லாமல் எடுத்த உடனே ''அவர்கள்தான் எனக்கு எதிரி. நான் அழித்து விடுவேன்'' என்று சொல்கிறார். இதெல்லாம் ரொம்ப தப்பு. அவங்களுக்கெல்லாம் 50 வருட அனுபவம் உள்ளது. இவருடைய வயதுதான் அவர்களுடைய அனுபவம். ஆனால், மேடையில் கூட்டம் இருக்கிறது என்பதற்காக எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசக்கூடாது. 

நான் மு.க.ஸ்டாலினை மானசீகமாக மதிக்கிறேன். அவரைப்போய் விஜய் இப்படி பேசுகிறாரே என்று மனம் வருந்தினேன். ஒரு நடிகராக அவர் சினிமா துறையில் இருக்கிற டெக்னீசியன்களுக்கு முதலில் உதவி செய்யட்டும். அதை விட்டுவிட்டு மக்களுக்கு அதைச் செய்கிறேன்... இதைச் செய்கிறேன் என்று சொல்கிறார். முதலில் அதை செய்யுங்கள். களத்தில் இறங்கி நீங்கள் வேலை பார்க்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. அவரது ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தருவார்கள், எனது ரசிகர்கள் எனக்கு ஆதரவு தருவார்கள்.

கூட்டத்தை பார்த்து நாம் எதையுமே கணிக்க முடியாது. ரசிகர்கள் வேறு; வாக்காளர்கள் வேறு. எனக்கும் இவருக்கு மேல் கூட்டம் இருந்தது. தயாரிப்பாளர் சங்கத் தலைவராக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் போட்டியிட்டபோது அவரை நான் எதிர்த்து நின்றேன். இப்போது அவரது மகன் ஜோசப் விஜயை எதிர்த்து நிற்க நான் தயாராக இருக்கிறேன். எந்த கட்சி கூப்பிட்டாலும், கூப்பிட விட்டாலும் நான் சுயேட்சையாக நின்று விஜய்க்கு எதிராக போட்டியிடுவேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திமுகவின் காப்பி... தெளிவில்லாத விஜய்... தெறிக்கவிடும் தமிழிசை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share