×
 

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா.. பாஜக வெளிநடப்பு, அதிமுக ஆதரவு..!

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் சந்தித்து விட்டு திரும்பிய மறுநாளே, அதிமுக - பாஜக இடையே அப்பட்டமான கருத்து வேறுபாடு வெளிப்பட்டுள்ளது. 

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது. அந்த மசோதா மீது ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்துப் பேசினர். 

ஆனால் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பும் செய்தனர். பின்னர் அவைக்கு வெளியே பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாகளிடம் பேசியதாவது..

இதையும் படிங்க: மத்திய அரசின் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா.. எதிர்த்து தீர்மானம் கொண்டு வந்த முதலமைச்சர்..!

வக்பு வாரிய சொத்துக்களை நிர்வாகம் செய்வதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி சட்டத் திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. ஜனநாயக முறைப்படி சட்டத் திருத்தத்தை கொண்டு வருவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது.  ஜனநாயக முறைப்படி சட்டத் திருத்தத்தை கொண்டு வருவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. வக்பு சொத்துகளை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவே இந்த சட்டத்திருத்தம்; வக்பு சொத்துகளை நிர்வகிப்பதில் பெண்களுக்கும் இட ஒதுக்கீடு தருகிறது சட்டத்திருத்தம் என்று கூறினார். 

ஆனால் அவைக்கு வக்பு வாரிய சட்டதிருத்திருத்த மசோதாவிற்கு எதிரான தனித்தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. கொண்ட கொள்கையில் இரண்டு கட்சிகளுமே உறுதியாக உள்ளன என்று பாராட்டலாம். ஆனால் கூட்டணிக் கணக்கு என்று வரும்போது முட்டல், மோதல் உறுதி என்பதும் இதன்மூலம் புலனாகிறது. 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பின்னர்  செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசும்போது இதுஒன்றும் கூட்டணிப் பேச்சுவார்த்தை இல்லை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது என்று குறிப்பிட்டார். ஆனால் அமித் ஷாவின் எக்ஸ் தள பதிவோ, 2026 தேர்தலுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். 

ஆனால் இன்றோ தமிழக சட்டப்பேரவையில் திமுக கொண்டு வந்த வக்பு வாரிய சட்டத்திருத்தத்திற்கு எதிரான தனித்தீர்மானத்தில் பாஜக ஒரு நிலைப்பாடும், அதிமுக வேறொரு நிலைப்பாடும் எடுத்துள்ளது, எந்தவகையில் இவர்கள் இருவரும் ஒட்டுவார்கள் என்ற கேள்வியை எழுப்பி உள்ளது..அதேசமயம் கொள்கை வேறு, கூட்டணி வேறு என்ற இபிஎஸ் பேசியதும் நினைவுக்கு வருகிறது.

இதையும் படிங்க: மத்திய அரசின் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா.. எதிர்த்து தீர்மானம் கொண்டு வந்த முதலமைச்சர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share