×
 

ரூல்ஸ் தெரியாத ஆளுநருக்கு இங்க என்ன வேலை .. ஜோதிமணி எம்.பி பளீர் ..!

முதலில் தமிழ்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சி நிறைவடையும் போது தேசியகீதமும் பாடப்படும் என்று கூட தெரியாத ஆளுநருக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை என கேள்வி எழுப்பியுள்ளார் எம்.பி ஜோதிமணி


2025 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம்  தொடங்கியதுமே சர்ச்சையும் தொடங்கிவிட்டது .  சட்டசபைக்குள் முதல் நிகழ்வாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதையடுத்து, கவர்னர் தேசிய கீதம் பாட வேண்டும் என்று அறிவுறுத்தியதாக தெரிகிறது. அதை ஏற்க மறுத்ததால் கவர்னர் தமது உரையை வாசிக்காமல் அவையை விட்டு வெளியேறினார்.  இதுகுறித்து கவர்னர் மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. தமிழக கவர்னர் தமிழகத்தின் மொழி, கலாசாரம் மற்றும் மரபுகள் உள்ளிட்ட மாநிலத்தின் செழுமையான கலாசார பாரம்பரியத்தின் மீது மாறாத அன்பு கொண்டவர் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தமிழ்த்தாய் வாழ்த்து என்ற தமிழ் மாநில பாடலுடைய புனிதத்தை எப்போதும் ஒவ்வொரு நிகழ்விலும் பயபக்தியுடன் அவர் பாடுகிறார்.அரசியலைமைப்புச் சட்டத்தை மதித்து, சட்ட கடமைகளை பின்பற்றுவது கவர்னரின் கடமை. தேசிய கீதத்துக்கு மரியாதை தருவது அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டு உள்ள அடிப்படை கடமையாகும். பெருமைக்குரிய விஷயமும் கூட.நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநில சட்டசபையிலும் கவர்னர் உரையின் தொடக்கம், முடிவில் தேசிய கீதம் பாடப்படுகிறது அல்லது இசைக்கப்படுகிறது. பலமுறை இதுபற்றிய நினைவூட்டல்களை முன்னரே தெரிவித்த பின்பும், அவை வேண்டும் என்றே புறக்கணிக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது என்று பதிவிடப்பட்டது இருந்தது.

தமிழக சட்டப்பேரவையில் தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது  என ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் விளக்கம் அளித்துள்ளது. சமூக வலைத்தளத்தில் வெளியான இந்த விளக்கம் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு டேக் செய்யப்பட்டுள்ளது. பேரவையிலிருந்து ஆளுநர் வெளியேறியதால் அவரது உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். தொடர்ந்து அவை தேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்தை ஆளுநர் புறக்கணித்ததாகவும் அவமதிப்பு செய்ததாகவும் மறுபுறம் ஆளுநர் மீது விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் கரூர் நாடாளுமன்ற எம்.பி ஜோதிமணி ஆளுநரின் தவறுகளை சுட்டிக்காட்டி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் அதில்   நிகழ்ச்சியின் முதலில் தமிழ்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சி நிறைவடையும் போது தேசியகீதமும் பாடப்படும்  என்றுகூட தெரியாத ஆளுநருக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை? ஒவ்வொரு முறையும் ஆளுநர் உரையைப் படிக்காமல் ஓடிப்போவது  ஆளுநருக்குத் தான் அவமானம். இதனால்  தமிழ்நாடு அரசுக்கும், மக்களுக்கும்  இழப்பு எதுவுமில்லை” என விமர்சனம் செய்துள்ளார்..
 

இதையும் படிங்க: சட்டப்பேரவை நேரலை ஒளிபரப்பை நிறுத்தியது ஏன்? தவெக தலைவர் விஜய் கேள்வி...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share