×
 

அண்ணாமலை மாற்றப்பட்டால் என்ன நடக்கும்..? அமித்ஷாவுக்கு சென்ற உளவுத்துறை ரிப்போர்ட்..?

சிலர் இந்த வளர்ச்சியை தடுக்க, தவறான தகவல்கள் டெல்லிக்கு அனுப்பி பாஜகவில் குழப்பம் ஏற்படுத்த முயல்கின்றனர்.

''பாஜக மாநிலத் தலைவருக்கான தேர்தல் விரைவில் நடக்கும். அதன் பிறகு அதுகுறித்துப் பேசுகிறேன். புதிய மாநிலத் தலைவருக்கான போட்டியில் நான் இல்லை. என்னைப் பொறுத்தவரை இந்தக் கட்சி நன்றாக இருக்கவேண்டும். பாஜகவில் தலைவர் பதவிக்கு போட்டி எல்லாம் இல்லை. எல்லோரும் சேர்ந்து ஏக மனதுடன் ஒருவரைத் தலைவராகத் தேர்வு செய்வார்கள். ஊழலுக்கு எதிராக வந்தவன் நான். எதையும் சமரசம் செய்ய மாட்டேன். தேசிய கட்சியை சேர்ந்தவன் நான். அதனால் எல்லவாற்றையும் பார்க்க வேண்டும். ஒரு தொண்டனாக தலைமை என்ன சொல்கிறதோ அதை செய்வேன்” எனத் தெரிவித்தார் அண்ணாமலை.

இந்நிலையில் அவர் இமயமலைக்கு செல்வதாக ஊடகங்கள் யூகங்களை கிளப்பி வருகின்றன. '' இந்நிலையில், ''பாகுபலி படத்தில் மஹேந்திர பாகுபலி என்று பிரபாஸ் பெயரை உச்சரிக்கும்போது, மக்கள் எழுப்பும் கரகோஷம் விண்ணை பிளக்குமோ... அதேபோல், நரேந்திர மோடி ஜி,மற்றும் அமித்ஷா , தமிழகம் வரும் ஒவ்வொரு முறையும் மேடையில் அண்ணாமலை என்று உச்சரிக்கும்போது, அந்த கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் எழுப்பும் கரகோஷம், மோடி, அமித்ஷா இருவரையும் புன்னகைக்க வைக்கிறது.

இதையும் படிங்க: இதுக்குத் தான் பதவி விலகுறாரா அண்ணாமலை? - ரகசியத்தை உடைத்த துக்ளக் ரமேஷ்...! 

தமிழக பாஜக வளர்ச்சிக்கு அண்ணாமலைதான் திருப்புமுனை. அவரால் மட்டுமே தமிழகத்தை பாஜகவுக்கு இழுக்கும் சக்தி உள்ளது. அதை நன்றாக அறிந்த மோடி, அமித்ஷா, அண்ணாமலையை முழுமையாக நம்பி, தமிழக பாஜக வளர்ச்சிக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளனர். ஆனால் சிலர் இந்த வளர்ச்சியை தடுக்க, தவறான தகவல்கள் டெல்லிக்கு அனுப்பி பாஜகவில் குழப்பம் ஏற்படுத்த முயல்கின்றனர்.

தங்களை வலதுசாரி பத்திரிகையாளர்கள் என காட்டிக்கொண்டு, எடப்பாடி பழனிசாமிக்கு சொம்பு அடிக்கும் சிலர், அதிமுக மிக வலுவான கட்சி. பாஜகவுக்கு தமிழகத்தில் வருங்காலமே இல்லை.
பாஜகவுக்கு பாய்ச்சல் எடப்பாடியில்லாமல் முடியாது என ஒரு பொய்யான நெகடிவ் டெல்லியில் உள்ள முக்கிய புள்ளி ஒருவரின் மூலம் பரப்பப்பட்டு, பாஜகவின் வளர்ச்சியை தடுக்கும் திட்டம் ஓடுகிறது.

இதன் விளைவாக அதிமுக கூட்டணிக்கான வாய்ப்பு குறித்து டெல்லி தலைமை சிந்திக்க தொடங்கியது. இதற்காக அமித்ஷா, எடப்பாடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து "அண்ணாமலை மாற்றம்?" என்ற செய்தி பரவியது. ஆனால்… தமிழக பாஜகவின் உண்மை நிலையை உணர்ந்த உளவுத்துறை, அண்ணாமலை மாற்றப்பட்டால், பாஜகவின் 70% ஆதரவாளர்கள் கட்சியை விட்டுவிடுவார்கள். தமிழகத்தில் பாஜக வளர்ச்சியை தடுக்கும் ஒரே வழி, அண்ணாமலையை மாற்றுவதுதான்! வெண்ணெய் திரண்டுவந்த நேரத்தில் பானையை உடைப்பதுபோல், பாஜகவின் வளர்ச்சியை முடக்குவதற்கான திட்டம் இது" என்று உறுதியான ரிப்போர்ட் வழங்கியது.

எடப்பாடியின் ஆதரவாளர்கள் பாஜகவுக்கு எதிராக திட்டமிட்டு செயல்படுவதை டெல்லி தலைமை புரிந்துகொண்டது. இதனால் மோடி, அமித்ஷா இருவரும் ஒருபோதும் அண்ணாமலைக்கு பதிலாக வேறு யாரையும் வைத்து தமிழக பாஜகவை தொலைப்பது இல்லை. அண்ணாமலை தலைமையிலேயே 2026 சட்டசபை தேர்தலை பாஜக சந்திக்கப் போகிறது. விரைவில் அண்ணாமலை தொடர்ந்து தமிழக பாஜக தலைவராக இருப்பதை உறுதி செய்யும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும்'' என்று அண்ணாமலை ஆதரவாளர்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
 

இதையும் படிங்க: நயினார் நாகேந்திரனுக்கு சான்ஸே இல்லை... பாஜகவின் பயங்கர திட்டம்... அடுத்த தமிழக தலைவர் இவரா..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share