×
 

அண்ணாமலைக்கு என்ன பதவி தெரியுமா..? அறிவித்தார் அமித் ஷா... பாஜக அசத்தல் ப்ளான்..!

தமிழ்நாடு பாஜக தலைவராக, அண்ணாமலை பாராட்டத்தக்க சாதனைகளைச் செய்துள்ளார்.

தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து விடைபெறுகிறார் அண்ணாமலை. 2021 ஜூலை 8-ல் பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட அண்ணாமலை 4 ஆண்டுகள் அப்பொறுப்பில் இருந்தார். அண்ணாமலை தலைமையில் 2024 மக்களவைத் தேர்தலை தமிழ்நாடு பாஜக எதிர்கொண்டது. இந்நிலையில் கமலாலயத்தில் வைக்கப்பட்டு இருந்த அண்ணாமலையின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது. அவரது பெயர்ப்பலகையும் அழிக்கப்பட்டுள்ளது.

 

விருப்ப மனு தாக்கல் 2 மணிக்கு மேல் தொடங்கியநிலையில், ஒரு சில மணி நேரத்துக்கு முன்பே பாஜக அலுவலகம் வந்த நயினார் நாகேந்திரன், அலுவலக வாயிலைத் தொட்டுக்கும்பிட்டுவிட்டு உள்ளே சென்றபோதே, அவர்தான் புதிய தலைவர் என்று சூசகமாகப் புரிந்துகொள்ள முடிந்ததாக அங்கிருந்த பாஜக தொண்டர்கள் கூறியுள்ளனர். பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்ட பேனரிலும் நயினார் நாகேந்திரன் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. நயினார் நாகேந்திரன் பெயரை அண்ணாமலை எல்.முருகன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரும் பரிந்துரைத்தனர்.

இதையும் படிங்க: தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார்? நயினாரை தொடர்ந்து மேலும் ஒருவர் விருப்பமனு; கமலாலயத்தில் குழப்பம்!!

அடுத்து அண்ணாமலை என்ன செய்யப்போகிறார் அவருக்கு என்ன பதவி வழங்கப்படும் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ்தளப்பதிவில் அதற்கு விளையளித்துள்ளார். அவரது பதிவில், “தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரனிடம் இருந்து மட்டுமே வேட்புமனு பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவராக, அண்ணாமலை பாராட்டத்தக்க சாதனைகளைச் செய்துள்ளார்.

பிரதமர் மோடியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதாக இருந்தாலும் சரி, கட்சியின் திட்டங்களை கிராமம் கிராமமாக எடுத்துச் செல்வதாக இருந்தாலும் சரி, அண்ணாமலையின் பங்களிப்பு முன்னோடியில்லாதது. கட்சியின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலையின் திறன்களை பாஜக பயன்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தலைவர் பதவி: அண்ணாமலை அவுட்... நயினாருக்கு ஆப்பு... விதியை மாற்றிய பாஜக..!

அண்ணாமலை தமிழக பாஜகவின் முக்கியமான முகமாகத் திகழ்கிறார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான இவர், 2020 ஆகஸ்டில் பாஜகவில் இணைந்து, 2021 ஜூலையில் தமிழ்நாடு மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில், கட்சி தமிழ்நாட்டில் தனது செல்வாக்கை விரிவுபடுத்த முயற்சித்து வருகிறது, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களை ஈர்க்கும் வகையில். அண்ணாமலை, "என் மண், என் மக்கள்" போன்ற பயணங்கள் மூலம் மக்களோடு நேரடியாக இணைந்து, பாஜகவின் கொள்கைகளை முன்னெடுத்தார். 2021 சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியிலும், 2024 மக்களவைத் தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியிலும் போட்டியிட்டார், ஆனால் இரண்டிலும் வெற்றி பெறவில்லை.

அவரது நேரடியான பேச்சு, ஆக்ரோஷமான அரசியல் பாணி, ஆதரவையும் எதிர்ப்பையும் ஒருசேர பெற்றுள்ளது. சமீபகாலமாக, அதிமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தைகள் மற்றும் கட்சித் தலைமை மாற்றம் குறித்த விவாதங்களில் அவரது பெயர் அடிக்கடி இடம்பெற்றது. இருப்பினும், அண்ணாமலை தமிழக பாஜகவின் முக்கிய தலைவராகவும், தேசிய அளவில் கட்சியின் எதிர்கால உத்திகளில் முக்கிய பங்கு வகிப்பவராகவும் தொடர்ந்து செயல்படுவார்.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share