×
 

தூக்கியடிக்கப்பட்ட அன்புமணி... ராமதாஸை தூண்டிவிட்டது இவரா? - பாகவினர் ஷாக்!

அன்புமணியை பதவியை விட்டு தூக்கியதில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய உறுப்பினரின் பங்களிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து ராமதாஸ் தூக்கியதன் பின்னணியில் அவரது அக்கா காந்திமதி இருப்பதாக சொல்கின்றனர். பாமகவினர் சில மாதங்களாகவே அக்கா தம்பிக்குள் இருந்த புகைச்சல் தற்போது வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. ராமதாஸ் தன்னுடைய பேரன் முகுந்தனை கடந்த டிசம்பர் மாதம் பாமகவின் இளைஞரணி தலைவராக அறிவித்தார். ஆனால் அதை அன்புமணி ஏற்று கொள்ளவில்லை. நான்கு மாதத்திற்கு முன் கட்சிக்கு வந்தவர்களுக்கெல்லாம்
பதவி தருகிறார்கள் என மேடையிலேயே தன்னுடைய எதிர்ப்பை காட்டினார்.

அப்போதே நான் சொல்றததான் கேட்கணும் இல்லன்னா வெளிய போ என்று என சொல்லி பரபரப்பை கிளப்பினார் ராமதாஸ். அதன் பிறகு எனக்கு அந்த பதவியே வேண்டாம் என முகுந்தனை விலகியதாக தகவல் வெளியானது. அன்று அன்புமணி அப்படி பேசியது ராமதாஸ் குடும்பத்தில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது.  இது தந்தை உருவாக்கிய கட்சி அதில் அனைவருக்கும் உரிமை உண்டு என்று தம்பி அன்புமணிக்கு எதிராக போர்கொடி தூக்கினார் முகுந்தனின் தாயார் காந்திமதி. 

இதையும் படிங்க: எல்லாமே நான் தான்.. அன்புமணி பதவி பறிப்பு விவகாரம்..! குடும்ப உறுப்பினர்களுடன் ராமதாஸ் ஆலோசனை..!

அதேபோல் கட்சியின் மொத்த கண்ட்ரோலும் அன்புமணியிடம் போவதை காந்திமதி விரும்பவில்லை எனக்கூறப்படுகிறது. அன்புமணியை அடுத்து சௌமிய அன்புமணியும் கட்சி பணிகளில் ஆக்டிவவாக இருக்க ஆரம்பித்தார். 2024 மக்களவை தேர்தல் சமயத்தில் சௌமியா அன்புமணிக்காக மகள்களை பிரச்சாரத்தில் குதித்தனர். இப்படி அன்புமணி மனைவி, மகள்கள் என அடுத்தடுத்து உள்ளே வந்து அந்த குடும்பத்தை சுற்றியே பாமக அரசியல் நடப்பதை அக்கா காந்திமதி விரும்பாமல் அதிருப்தியில் இருந்ததாக சொல்கின்றனர்.

 அதவும் தனது மகனுக்கும் பதவி கொடுக்காமல் ஓரம் கட்டிவிட்டு, அன்புமணி தனது மகள்களை மட்டும் அரசியலுக்குள் கொண்டு வரலாமா என ஆதங்கத்தில் இருந்துள்ளார். இது பற்றி தனது தந்தையின் காதுகளுக்கும் அடிக்கடி கொண்டு சென்றுள்ளார் மேலும் நீங்கள் உருவாக்கிய கட்சியில் யார் இருக்க வேண்டும் யாருக்கு பதவி தர வேண்டும் என்று முடிவெடுக்கும் உரிமை கூட உங்களுக்கு இல்லையா என்று குடும்பத்தினர் சிலர் ராமதாசிடம் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர் அதேபோல் தன்னை ஓரம் கட்டிவிட்டு அன்புமணி கண்ட்ரோலில் கட்சி செல்வதால் ராமதாசும் கடுப்பில் இருந்துள்ளார் இதன் ஒட்டுமொத்த வெளிப்பாடாகதான் இனி நான்தான் தலைவர் அன்புமணி செயல் தலைவர் என்று ராமதாஸ் சொல்லிிருக்கிறார் என பாமக வட்டாரத்தில் பேசப்படுகிறது 

இதையும் படிங்க: சின்னய்யாவுக்கு சப்போர்ட்டா... திலக‘போமா’ ஆன திலகபாமா... முகத்தை திருப்பிக்கொண்ட பெரியய்யா!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share