×
 

திமுக மேடையில் ரங்கராஜ் பாண்டே எதற்கு? இவ்வளவு ஜனநாயகம் தேவையா..? சுப.வீ ஆதங்கம்

ஆயிரம் முறை இவர்களை அழைத்தாலும் அவர்களுடைய வீட்டில் இருந்து ஒரே ஒரு வாக்குக்கூட, உதய சூரியன் சின்னத்திற்கு வராது. அவர்கள் ஒரு நாளும் நமக்கு வாக்களித்ததில்லை.

''ரங்கராஜ் பாண்டேவை, தினமணி வைத்தியநாதனை, எஸ்.வி.சேகரை திமுக மேடைகளில் பேச வைக்க வேண்டுமா? திமுக தலைவர்களே,அமைச்சர்களே இவ்வளவு ஜனநாயகம் தேவையில்லை'' என சுப.வீரபாண்டியன் ஆதங்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கருத்தரங்கத்தில் பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே கலந்துகொண்டு பேசியது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து பேசியுள்ள அவர், ''இங்கே ஒரு செய்தியை, என் ஆதங்கத்தை நான் பதிவு செய்ய விரும்புகிறேன். திமுகவின் தலைவர்களுக்கும், அமைச்சர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் வைக்கிறேன். இவ்வளவு ஜனநாயகம் வேண்டாம். வைத்தியநாதனும், எஸ்.வி.சேகரும், ரங்கராஜ் பாண்டேவும் பேசித்தான் நாம் வெற்றி பெற வேண்டுமா என்ன?

இதையும் படிங்க: இது தான் உங்க இருமொழி கொள்கையா..? பிடிஆர்-ஐ கிழித்தெடுத்த அண்ணாமலை..!

ஆயிரம் முறை இவர்களை அழைத்தாலும் அவர்களுடைய வீட்டில் இருந்து ஒரே ஒரு வாக்குக்கூட, உதய சூரியன் சின்னத்திற்கு வராது. அவர்கள் ஒரு நாளும் நமக்கு வாக்களித்ததில்லை. எந்தத் தேர்தலில் அந்த மூன்று சதவீதம் பேர்  நமக்கு வாக்களித்து இருக்கிறார்கள்? அவர்கள் வாக்களித்ததும் இல்லை. வாக்களிக்க போவதுமில்லை, வாக்களிக்க வேண்டியதும் இல்லை.

97 சதவீத மக்கள் அவர்களின் 60க்கும் மேற்பட்ட மக்கள் நமக்குத்தான் என்றைக்கும் இருப்பார்கள். திராவிட இயக்கத்தால் பயன்பெற்ற அவர்கள், இன்றைக்கு மும்மொழிக் கொள்கையை எதிர்த்து நாடு முழுவதும் ஒரு நெருப்பு பரவி இருக்கிறது என்று சொன்னால், அது திமுகவினால்தான். தமிழர்கள் நாகரீகமற்றவர்கள் என்று சொல்கிற துணிச்சல் அங்கே ஒருவருக்கு வந்தது என்றால் அதே நாளில் அவரை திரும்ப வைக்கிற அதை திரும்பி வாங்கிக் கொள்ள வைக்கிற ஆற்றல் திமுகவிற்கு இருக்கிறது. இழந்தது திமுக கழகம் சாத்தித்து இருக்கிறது. சகித்துக் கொண்டிருக்கிறது... சாதிக்கும்'' எனத் தெரிவித்துள்ளார். 

பிரபல சினிமா விமர்சகர் ஆன ப்ளூ சட்டை மாறன் இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில்"ஆரிய மாடலுக்கு மேடையமைத்து தந்து மகிழும் திராவிட மாடல். ரஜங்கராஜ் பாண்டே விவாத நிகழ்ச்சி நடத்துவதில் இவர் ஒரு சூரப்புலி என எண்ணி பலரும் ஃபயர் விட்ட காலமுண்டு. ஆனால் ஒரு கட்டத்தில் அதே நிகழ்ச்சிகளில் தனது சங்கித்தனத்தை காட்ட ஆரம்பித்தார். பிறகு நெற்றியில் காவித்திலகமிட துவங்கினார். யூட்யூப் பக்கம் கரை ஒதுங்கினார். 

இவரது அனைத்து பேச்சுகளும் தமிழ் மற்றும் தமிழர் நலனுக்கு எதிரானவை. இவர் ஒரு அக்மார்க் சங்கி என்பது ஊரறியும். ரஜினி, வடிவேலு, ரங்கராஜ் போன்றோரை எல்லாம் பழகிய தோஷத்திற்காக.. வீட்டில் நடக்கும் சுக, துக்க நிகழ்வுகளுக்கு அழைப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். பொது இடங்களில் கண்டால் வணக்கம் வைத்து விட்டு கிளம்பிவிட வேண்டும். அதைவிட்டுவிட்டு இப்படி திமுக மேடையில் பேசவிடுவது, அளவுக்கு மீறிய நட்பு பாராட்டுவதெல்லாம் தேவையற்ற வேலை.

இதையெல்லாம் நீங்கள் தெரியாமல் செய்வதாக தெரியவில்லை. வருங்காலத்தில் பாஜக கூட்டணிக்கு அடிக்கல் நாட்டுவதாகவே தெரிகிறது‌. ரங்கராஜ் உங்கள் மேடைகளில் பேசுவதால் ஒரு ஓட்டு கூட திமுகவுக்கு ஏறப்போவதில்லை. அவருக்கு நீங்கள் என்ன ராஜ மரியாதை செய்தாலும்.. தனது விஸ்வாசத்தை பாஜகவிற்கு மட்டுமே காட்டுவார்'' என விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: மும்மொழிக்கு ஆதரவளித்த முதல்வர்... வெளிநடப்பு செய்த திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share