×
 

சாதியவாதிகளிடம் தோற்கும் ஸ்டாலின் அரசு.! திமுகவை உரசிப்பார்க்கும் விசிக..!

சாதியவதிகள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறது இந்த திராவிட மாடல் திமுக அரசு. பிஜேபி யை விமர்சனம் செய்வதில் உள்ள வேகம் 1% சதவீதம் இல்லை திமுக குறைகளை சுட்டி காட்டுவதில்.

நெல்லையில் மாணவர் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பை கிளப்பி உள்ளது.  வசந்தம் நகர் அருகே 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கியதில், படுகாயமடைந்த மாணவர் சின்னத்துரைக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நெல்லை மாநகர கிழக்கு துணை ஆணையர், உதவி ஆணையர் நேரில் விசாரணை நடத்தி வருகிறார். இதற்கு பலரும் கடும் கணடனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனை அடுத்து விசிக எம்.பி., ரவிகுமார் தனது எக்ஸ்தளப்பதிவில், ''சனாதனவாதிகளை எதிர்ப்பதில் வெற்றி காணும் தமிழ்நாடு அரசு சாதியவாதிகளிடம் ஏன் தோற்றுப் போகிறது?'' எனக் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக கூட்டணியில் இருந்தும் ஸ்டாலின் அரசு சாதியவாதிகளிடம் தோற்றுப்போவதாக குற்றம் சாட்டி உள்ளது திமுகவினரை எரிச்சலடைய வைத்துள்ளது. 

இதையும் படிங்க: கூடுதல் தொகுதி, ஆட்சியில் பங்கு.. திமுக கூட்டணியை உடைக்க ஆசைவார்த்தை.. திருமா கொடுத்த ஷாக்!

அவரது கருத்துக்கு, ''புல்லட் ஓட்டினால் வெட்டு.. கபடி போட்டியில் வென்றால் வெட்டு.. நாங்குநேரி சின்னத்துரை மீண்டும் வெட்டு.. சாதி ஆணவம் உச்சத்தில் நர்த்தனம் ஆடுகிறது. அடையாள அரசியலும், சாதிய அணி திரட்டலும், வாக்கு வங்கி உத்திகளும் புரட்டிப் போடுவதென்னவோ எளிய மக்களின் வாழ்க்கையைத் தான்'' என ஆதரவு தெரிவித்தாலும் பலரும் விசிகாவையே விமர்சித்து வருகின்றனர்.

 

''பிறப்பின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு பார்ப்பதுதான் சனாதனமும், சாதியவாதமும். ரெண்டும் ஒன்றுதான். எதில் தோற்றாலும் ஒரே தோல்வி தான். இதை நாம் சொல்லி ரவிகுமார் அவர்களுக்கு தெரிய வந்தது வேண்டியதில்லை. பாவம் கூட்டணி நிர்பந்தம்.

சாதனத்தை பாஜக முன்னிறுத்துகிறது. அதை எதிர்த்து தமிழ்நாடே போராடி வீழ்த்துகிறது. ஆனால், சாதியை திமுக-அதிமுக முன்னிறுத்துகிறது. கெடுவாய்ப்பாக உங்களை போன்றவர்கள் திமுக-அதிமுகவை போராடி வீழ்த்தாமல் மாறாக ஆதரித்து வளர்கிறீர்கள். இது தான் உண்மையான காரணம்.

தோற்று போவது இல்லை. சாதியவதிகள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறது இந்த திராவிட மாடல் திமுக அரசு. பிஜேபி யை விமர்சனம் செய்வதில் உள்ள வேகம் 1% சதவீதம் இல்லை திமுக குறைகளை சுட்டி காட்டுவதில். தினந்தோறும் சாதீய வன்கொடுமைகள் அரங்கேறி கொண்டு இருக்கின்றன. 

உங்களைப் போன்ற கூட்டணிக் கட்சிகள் சுட்டிக்காட்டாமல் தோழமை சுட்டுக் கொண்டிருந்தால் இது நீடித்துக் கொண்டே இருக்கும். அது இருக்கும் வரை தான் அரசியல் செய்ய முடியும். இதை தெரிந்து தான் மருத்துவர் ராமதாஸ் இடையில் ஒரு பேட்டி கொடுத்தார். அப்போது அது வருத்தமாக இருந்தாலும் இப்போது புரிகிறது. அது தான் உண்மை'' எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பாஜக தயவுக்காக மக்களிடமிருந்து விலகி நிற்கும் அதிமுக.. அதிமுகவை எகிறி அடிக்கும் திருமாவளவன்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share