×
 

பாஜகவுடன் நாங்கள் கூட்டணி வைத்ததும், அதிமுக வைப்பதும் ஒன்றாகி விடுமா..? நியாயப்படுத்தும் திமுக..!

நீங்­கள் பாஜகவுடன் கூட்­டணி வைக்­க­வில்­லையா? அப்­போது மட்­டும் பாஜக இவர்­க­ளுக்கு நல்ல  கட்­சி­யா­கத் தெரிந்­ததா? இப்­போது எங்­களை மட்­டும் ஏன் பழி சொல்­கி­றீர்­கள்.

பாஜக -அதிமுக கூட்டணி சேர்ந்ததை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. பொருந்தாக் கூட்டணி, நிர்பந்தக் கூட்டணி என நாள்தோறும் தாக்கி வருகின்றன. இந்நிலையில், திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் வாஜ்பய் காலமும், மோடி காலமும் என்கிற தலையங்கத்தில், “பா.ஜ.க.வுடன் 2026 தேர்­த­லில் மட்­டு­மல்ல, 2031 சட்­ட­மன்­றத் தேர்­தலி­லும் கூட்­டணி கிடை­யாது என்று சொல்லி வந்த நீங்­கள், இப்­போது உட­ன­டி­யாக பா.ஜ.க.வுடன் கூட்­டணி வைத்­தது ஏன்?” என்­ப­து­தான் எதிர்க்­கட்­சித் தலை­வர் எடப்­பாடி பழ­னி­சா­மி­யைப் பார்த்து முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் கேட்ட கேள்வி ஆகும்.

“நீங்­கள் பாஜகவுடன் கூட்­டணி வைக்­க­வில்­லையா? அப்­போது மட்­டும் பாஜக இவர்­க­ளுக்கு நல்ல கட்­சி­யா­கத் தெரிந்­ததா? இப்­போது எங்­களை மட்­டும் ஏன் பழி சொல்­கி­றீர்­கள். நாங்­கள் யாரு­டன் வேண்­டு­மா­னா­லும் கூட்­டணி வைப்­போம்” என்று பொறுப்­பற்ற வகை­யில் பதில் அளித்­தி­ருக்­கிறார் பழ­னி­சாமி.

இதையும் படிங்க: நீரின்றி பாகிஸ்தானியர்கள் செத்து மடிவார்கள்.. இதுதான் 56 இன்ச் பதிலடி.. துள்ளிக் குதிக்கும் பாஜக எம்.பி..!

வாஜ்­பாய் தலை­மை­யி­லான பாஜக அர­சின் திமுக அங்­கம் வகித்த போதி­லும், அக்­கட்­சி­யின்    ஆட்­சி­யை­யும் குறைந்த பட்ச செயல்­திட்­டத்­துக்கு கட்­டுப்­பட வைத்து அதில் இருந்து மீற முடி­யா­மல் கட்­டுப்­ப­டுத்­தி­யது கலை­ஞ­ரின் ஆற்­ற­லா­கும். ‘கலை­ஞர் இருக்­கு­மி­டத்­தில் மதச்­சார்பு இருக்­காது’ என்று முன்­னாள் நிதி அமைச்­சர் பெரி­ய­வர் சி.சுப்­பி­ர­ம­ணி­யம் சொல்லும் அள­வுக்கு பா.ஜ.க.வின் கடி­வா­ளத்தை கலை­ஞர் கையில் வைத்­தி­ருந்­தார் என்­பது வர­லாறு. வாஜ்­பாய் காலம் வேறு – மோடி காலம் வேறு என்­பதை பழ­னி­சாமி புரிந்து கொள்ள முயற்­சிக்க வேண்­டும். அன்­றைய அர­சி­யல் சூழலை முத­லில் உணர வேண்­டும்.

1996 ஆம் ஆண்டு தமிழ்­நாட்­டில் நடை­பெற்ற சட்­ட­மன்­றத் தேர்­த­லில் மொத்­தம் நான்கே நான்கு இடங்­கள் தான் ஜெய­ல­லி­தா­வின் அ.தி.மு.க. வென்­றது. 1991-96 அரா­ஜக ஊழ­லாட்­சிக்கு தமிழ்­நாட்டு மக்­கள் மாபெரும் தண்­ட­னை  தந்­தார்­கள். அவர் மீதும் அவ­ரது அமைச்­ச­ர­வை­யில் இடம் பெற்­ற­வர்­கள் மீதும் ஊழல் வழக்­கு­கள் போடச் சொல்லி மக்கள் வலி­யு­றுத்­தி­னார்­கள். கலை­ஞர் தலை­மை­யி­லான தி.மு.க. அரசு, இந்த வழக்­கு­களை விசா­ரிக்க மூன்று சிறப்பு நீதி­மன்­றங்களை அமைத்­தது.

இதில் இருந்து எப்­படி தப்­பிப்­பது என்று நினைத்த ஜெய­ல­லிதா, பாஜகவின் தயவை நாடி­னார்.  அவ­ரோடு கூட்­டணி வைத்து தமிழ்­நாட்­டில் இரண்டு தொகு­தி­க­ளில் வெல்ல பாஜகவும் திட்­ட­மிட்­டது. 1998 நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் அதிமுக – பாஜக கூட்­டணி உரு­வானது.

‘நிபந்­தனை இல்­லா­மல் கூட்­டணி சேர்ந்­துள்­ளேன்’ என்று ஜெய­ல­லிதா சொன்­னா­லும், தேர்­தல்      முடிந்­த­தும் தனது வேலை­க­ளைக் காட்­டி­னார். தேர்­த­லில் வென்று ஆட்சி அமைக்­கும் சூழல் பாஜகவுக்கு ஏற்­பட்­டது. உட­ன­டி­யாக ஆத­ர­வுக் கடி­தம் தர மாட்­டேன் என்­றார். தமிழ்­நாட்­டில் ஆட்­சி­யில் இருக்­கும் திமுக ஆட்­சி­யைக் கலைக்க வேண்­டும், என் மீதான ஊழல் வழக்­கு­களை ரத்து செய்ய வேண்­டும், சுப்­பி­ர­ம­ணி­யம் சுவா­மியை நிதி அமைச்­ச­ராக்க வேண்­டும், வாழப்­பாடி ராம­மூர்த்­திக்கு சட்­டத்­துறை அமைச்­சர் பதவி தர வேண்­டும் என்று ஜெய­ல­லிதா கோரிக்கை வைத்தார். அதனை பாஜக ஏற்­க­வில்லை.

இத­னால் கோப­மான ஜெய­ல­லிதா, ஆட்­சிக்கு ஆத­ரவு, அமைச்­ச­ர­வை­யில் சேர மாட்­டேன்,                பத­வி­யேற்­புக்கு போக மாட்­டேன் என்­றார். பின்­னர் அமைச்­ச­ர­வை­யில் சேர்ந்­தார். பத­வி­யேற்­பி­லும் கலந்து கொண்­டார். தம்­பி­துரை, சேடப்­பட்டி முத்­தையா, ஆர்.கே.குமார் ஆகி­யோர் அமைச்­சர் ஆனார்­கள். பத­வி­யேற்­புக்­குச் சென்ற ஜெய­ல­லிதா, ‘தி.மு.க. ஆட்­சி­யைக் கலைக்க வலி­யு­றுத்­து­வோம்’ என்று டெல்­லி­யில் பேட்டி கொடுத்­தார். அதிமுக உறுப்­பி­னர்­களை வைத்து நாடா­ளு­மன்­றத்­தில் இதைச் சொல்ல வைத்­தார். “356 ஆவது சட்­டப்­பி­ரிவை பயன்­ப­டுத்தி எந்த மாநில       அர­சை­யும் கலைக்க மாட்­டோம்” என்று பிர­த­மர் வாஜ்­பாய் திட்­ட­வட்­ட­மாக நாடா­ளு­மன்­றத்­தில் அறி­வித்­தார்.

அமைச்­சர் சேடப்­பட்டி முத்­தையா, ஒரு வழக்­கில் தொடர்­பு­டை­ய­வ­ராக இருந்­த­தால் அவர் பதவி  வில­கி­னார்.  ‘அமைச்­ச­ர­வை­யில் இருக்­கும் ஊழல் அமைச்­சர்­கள் அனை­வ­ரும் பதவி விலக வேண்­டும்’ என்று பிர­த­ம­ருக்கு கடி­தம் எழு­தி­னார் ஜெய­ல­லிதா. அவரை திருப்தி செய்ய பூட்­டா­சிங்கை நீக்­கி­னார் பிர­த­மர். ஆனால் ராம­கி­ருஷ்ண ஹெக்­டேவை நீக்க மறுத்­தார் பிர­த­மர். ‘திமுக ஆட்­சி­யைக் கலைத்­தால் பாஜக ஆட்­சிக்கு தரும் ஆத­ரவை நான் வாபஸ் பெறு­வேன்’ என்று ஹெக்டே அறி­வித்­தது ஜெய­ல­லி­தாவை கோபப்­ப­டுத்­தி­யது. ஹெக்­டேவை நீக்­கியே ஆக வேண்­டும் என்­றார் ஜெய­ல­லிதா. அவரை சமா­தா­னம் செய்ய டெல்­லி­யில் இருந்து ஜஸ்­வந்த்­சிங் வந்­தார்.

நிதித்­துறை இணை அமைச்­ச­ராக இருந்த ஆர்.கே.குமார், ஜெய­ல­லி­தா­வின் வரு­மா­ன­வரி வழக்­கு­கள் அனைத்­தை­யும் விசா­ரித்த அதி­கா­ரி­கள் அனை­வ­ரை­யும் ஒரே நாளில் இட­மாற்­றம் செய்­தார். 89 துணை ஆணை­யர்­கள், 108 உதவி ஆணை­யர்­கள் இட­மாற்­றம் செய்­யப்­பட்­டார்­கள். சில நாட்­க­ளில் தான் சொன்­னதை ஆர்.கே.குமார் செய்­ய­வில்லை என்று அவ­ரையே ராஜி­னாமா செய்­யச் சொன்­னார்   ஜெய­ல­லிதா.

தி.மு.க. ஆட்­சி­யைக் கலைக்க வேண்­டும் என்று சொல்லி நாடா­ளு­மன்­றத்­தில் பிரச்­சினை செய்து தின­மும் வெளி­ந­டப்பு செய்­தது அதிமுக. “திமுகவுக்­கும், பாஜகவுக்­கும் ரக­சிய உறவு இருக்­கி­றது. ஆர்.எஸ்.எஸ். தலை­வர்­க­ளு­டன் கலை­ஞர் தொடர்பு வைத்­தி­ருக்­கி­றார்” என்று பாஜக கூட்­டணி அர­சில் இருந்து கொண்டே கொக்­க­ரித்­தார் ஜெய­ல­லிதா.

இதற்கு முற்­றுப்­புள்ளி வைக்க நினைத்த உள்­துறை அமைச்­சர் அத்­வானி, “திமுக அர­சைக் கலைக்க முடி­யாது” என்று அறி­வித்­தார். (21.6.1998) “தேசப்­ பா­து­காப்­பில் அக்­கறை இல்­லாத ஒரு­வர் உள்­துறை அமைச்­ச­ராக இருப்­ப­தைப் பார்த்து வேத­னைப்­ப­டு­கி­றேன்” என்­றார் ஜெய­ல­லிதா. தமிழ்­நாட்­டின் பல இடங்­க­ளில் பிர­த­மர் வாஜ்­பாய் கொடும்­பாவியை அதிமுகவினர் கொளுத்­தி­னார்­கள்.

இப்­படி பிர­த­மர் வாஜ்­பாய், உள்­துறை அமைச்­சர் அத்­வானி ஆகிய இரு­வ­ரது நிம்­ம­தி­யை­யும் கெடுத்­துக் கொண்­டு இருந்­தார் ஜெய­ல­லிதா'' என கடுமையாக விமர்சித்துள்ளது.

இதையும் படிங்க: இந்தியா நிம்மதியா இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறாங்க! தரமான பதிலடி இருக்கு.. அண்ணாமலை பரபர பேச்சு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share