×
 

எதிர்கட்சிகள் பக்கம் கேமரா திரும்பாதா? - இபிஎஸ் கேள்வி...

சட்டசபை, திமுக பொதுக்கூட்ட மேடை அல்ல என்ற விமர்சனம்...

தமிழக சட்டப்பேரவையின் நிகழ்ச்சிகள் அனைத்தும் கடந்த சில ஆண்டுகளாக நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் அவ்வாறு ஒளிபரப்பப்படும் போது ஆளுங்கட்சியினர் மட்டும் காட்டப்படுவதாகவும், எதிர்கட்சியினரோ அவர்களது பேச்சுக்களோ ஒளிபரப்பப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது..

இதுதொடர்பாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், ஆளுங்கட்சி வரிசையோடும் சபாநாயகரோடும் சட்டப்பேரவை முடிந்துவிட்டதா என கேள்வி எழுப்பி உள்ளார். சட்டப்பேரவையின் கேமராக்கள் இன்றும் (4-வது நாளை குறிப்பிட்டு) இன்றும் எதிர்கட்சிகள் பக்கம் திரும்பவே இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்கட்சி வரிசை உங்களை அவ்வளவு அச்சுறுத்துகிறதா முதலமைச்சர் அவர்களே, எதற்காக இவ்வளவு அஞ்சி நடுங்குகிறீர்கள் என்பதும் இபிஎஸ் எழுப்பும் வினா.

இதையும் படிங்க: தேர்தல் இல்ல ..பொங்கல் ரொக்கப் பரிசும் இல்ல .. அரசை போட்டுத்தாக்கிய ஜான்பாண்டியன்!

யார் அந்த சார் என்ற நீதிக்கான கேள்வி உங்களை அவ்வளவு உறுத்துகிறது என்றால், மீண்டும் கேட்கிறேன் யாரைக் காப்பாற்ற முயற்சிக்கிறது இந்த ஸ்டாலின் மாடல் அரசு என அவர் சாடியுள்ளார். மக்கள் நலனுக்கான எதிர்கட்சியின் கேள்விகளை மக்கள் பார்த்து விடக்கூடாது என்று ஸ்டாலின் மாடல் அரசு எத்தனிப்பது ஜனநாயக படுகொலை என்றும் இபிஎஸ் விமர்சித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை எந்தவித ஒளிவுமறைவுமின்றி முழுமையாக மக்களின் குரலான எதிர்கட்சியின் கருத்துக்களை மக்களுக்கு நேரடி ஒளிபரப்ப வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை கேட்டுக் கொள்வதாக அந்த பதிவில் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். 

தமிழ்நாடு சட்டமன்ற பொதுமக்களின் தேவையை சபையேற்றி, சட்டமியற்றி, திட்டமியற்றி செயல்படும் தமிழக மக்களின் மேடை, திமுகவின் பொதுக்கூட்ட மேடையல்ல என்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். 

இந்த ஆண்டின் முதலாவது சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது. முதல்நாளில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்து சர்ச்சைக்கு வித்திட்டார். பிறகு கருப்புச் சட்டை அணிந்து வந்து அதிமுகவினர் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். வெளிநடப்பும் செய்தனர். இந்த தருணங்களில் சட்டசபையின் நேரலை அடிக்கடி நிறுத்தப்பட்டதும், ஆளுங்கட்சி தரப்பினரை மட்டுமே காட்டியதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையிலும், நேரலை ஒளிபரப்பை நிறுத்தியதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தார். 
 

இதையும் படிங்க: ஆளுநரும் ஆட்சியும் ரயில் தண்டவாளம் போல..அதிமுக செம்மலை ரிக்வெஸ்ட்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share