×
 

பெண்ணுக்கு எதிர்காலம் இருக்கு .. மனிதாபிமானம் இல்லையா உங்களுக்கு..? எதிர்க்கட்சிகளை துளைத்த அமைச்சர் சேகர்பாபு...

அண்ணா பல்கலைகழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் பெண்ணுடைய வருங்காலத்தை குலைக்கும் வகையில் பிரச்சனையை ஊதி ஊதி பெரிதாக்குகிறார்கள் என அமைச்சர் சேகர்பாபு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சென்னையில் அரசு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பின்னர் செய்தியார்களை சந்தித்தார் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. அப்போது பாலியல் வன்கொடுமை தொடர்பாக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர் ஆனால்  தூங்குபவர்களை எழுப்பலாம் தூங்குவதைப் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. ஒரே ஒரு கூற்றுதான் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு தேவையான நிவாரணத்தை, குற்றம் செய்தவர்கள் மீது எடுக்கப்படும் குற்ற நடவடிக்கை வாயிலாக தண்டனை பெற்று தருவதில் இந்த ஆட்சி எள்ளளவும் பின்வாங்கவில்லை. அப்படி இருந்தும் தொடர்ந்து இந்த பிரச்சனையை அரசியலாக பார்க்கின்றனர் என்று குற்றம்சாட்டினார்.

பாதிக்கப்பட்ட பெண்ணுடைய வருங்காலத்தை நினைக்காதவர்கள் தான் இப்படி இந்த பிரச்சனையை ஊதி ஊதி பெரிதாக்குகிறார்கள். நாமும் ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தான். நமக்கும் பெண் குழந்தைகள் இருக்கும் அல்லது நம்மைச் சார்ந்த உறவினர்களுக்கும் பெண் குழந்தைகள் இருக்கலாம். தொடர்ந்து இப்படி ஒரு இழிச் சொற்களை பயன்படுத்தி அந்த பெண்ணினுடைய வருங்காலத்தை  குலைத்து செய்கின்ற இவர்களை நிச்சயமாக வருங்காலம் ஏற்றுக்கொள்ளாது. மனிதாபிமானம் உள்ள மக்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என சேகர்பாபு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு ஜாமீனில் வெளிவராத அளவிற்கு பல்வேறு கடுமையான பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே நிச்சயம் தமிழகத்தை பொறுத்தவரை தமிழக மக்களைப் பொறுத்தவரை நீதி தவறாத, பெண்களுக்கு முழு பாதுகாப்பு உள்ள ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கிறது என்றார்.

இதையும் படிங்க: பெண்களுக்காக போராடக்கூட உரிமையில்லையா..போலீசுடன் மல்லுக்கட்டிய தவெக பெண் நிர்வாகிகள்

இதையும் படிங்க: அண்ணா பெல்ட்டால் அடிக்காதீங்க அண்ணா.. திமுகவினர் ஒட்டிய போஸ்டர்.. பரபரக்கும் நெல்லை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share