மகளிர் பிரீமியர் லீக்..! குஜராத் அணி அசத்தல் வெற்றி..!
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை குஜராத் அணி வீழ்த்தியது.
3-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் லக்னோவில் நடைப்பெற்று வருகிறது. வடோதரா, பெங்களூரு, லக்னோ, மும்பை ஆகிய 5 நகரங்களில் நடைபெற்று வரும் லீக் சுற்றின் 20 ஆட்டங்கள் உட்பட இந்தத் தொடரில் மொத்தம் 22 ஆட்டங்கள் நடைபெறுகிறது.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதுகின்றன. புள்ளிகள் அடிப்படையில் முதலிடம் பிடிக்கும் அணியானது நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். 2 மற்றும் 3-வது இடம் பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்தும்.
இதையும் படிங்க: மகளிர் பிரீமியர் லீக்! மும்பை அணி அபார வெற்றி...
இந்த நிலையில், 17 வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. கேப்டன் மெக் லேனிங் அதிரடியாக ஆடி 57 பந்தில் 92 ரன்கள் குவித்தார். மேலும் ஷபாலி வர்மா 40 ரன்னில் அவுட்டானார். குஜராத் அணி சார்பில் மேக்னா சிங் 3 விக்கெட்டும், டாட்டின் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. பெத் மூனி 44 ரன்னிலும், ஆஷிஷ் கார்ட்னர் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், குஜராத் அணி 19.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது குஜராத் அணியின் 4வது வெற்றி.
இதையும் படிங்க: மகளிர் பிரீமியர் லீக்! மும்பை அணி அபார வெற்றி...