திருமணம் முடிந்த கையோடு தனது கணவருடன் வந்து திருமலை பெருமாளை தரிசனம் செய்தார் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து
பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து ஐதராபாத்தைச் சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திரைப்படம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற வரவேற்பு விழாவில் ந நடிகர் அஜித் குடும்பத்துடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமணம் முடிந்த கையோடு திருச்சானூர் வந்து பத்மாவதி தாயாரை வழிபட்ட பி.வி. சிந்து வெங்கட தத்தா சாய் தம்பதி திருப்பதிக்கும் சென்று பெருமாள் தரிசனம் செய்தனர் . தம்பதிக்கு ரங்கநாயக்க மண்டபத்தில் வேத ஆசிர்வாதங்கள் முழங்க தீர்த்த மட்டும் கலந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. திருமணம் முடிந்த கையோடு தனது கணவருடன் வந்து சாமி தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது என பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்
இதையும் படிங்க: 8 மாதத்தில் கசந்த திருமணம் ..கணவரின் கொடுமை.. கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு
இதையும் படிங்க: யார் அந்த சார்..? 3 பொண்டாட்டி... டான்ஸ் ஆட வந்த பெண்ணுடன் டாவு... பிரியாணி ஞானசேகரனின் கசமுசா கருமங்கள்..!