தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக மகிழ்ச்சியான செய்தியை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த இரண்டு தினங்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரக்கூடிய சூழலில் குறிப்பாக தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வரக்கூடிய நிலையில், மேலும் இரண்டு தினங்களுக்கும் நீடிக்கும் என்ற ஒரு அறிவிப்பை வானிலை ஆய்வும வெளியிட்டுள்ளது.

நாளைய தினமும் தமிழ்நாட்டில் கனமழை தொடரும் என்ற அறிவிப்பு வானிலை ஆய்வு மையத்தால் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த மழைக்கான வாய்ப்பு இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றைய தினம் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும், இடி மின்னல் மற்றும்பலத்த காற்று கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இந்த வருஷம் வெயிலுக்கும் ஹாலிடே..! சர்ப்ரைஸ் கொடுத்த வானிலை..!

நாளை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 10ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், ஆறாம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் வெயிலினுடைய தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும் என்ற ஒரு தகவலையும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

குறிப்பாக ஆறாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் இரண்டலிருந்து மூன்று டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயர்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையைப் பொறுத்தவரை வானம் ஒருசில இடங்களில் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இன்றும், நாளையும் வெளுத்து வாங்கப் போகும் கனமழை... எங்கெல்லாம் தெரியுமா?