2026 சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து அரசியல் கட்சி தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டிருக்கிறார். ஒவ்வொரு மாவட்டமாக சென்று மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்க விஜய் முடிவெடுத்திருக்கும் நிலையில், அதற்கான முழு தரவுகளையும் கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தயார் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. முதன்முதலாக களத்தில் இறங்கி மக்களை சந்திக்கும் விஜயை தடபுடலாக வரவேற்க மாவட்ட பொறுப்பாளர்கள் முடிவெடுத்திருக்கும் நிலையில் விஜய்க்கு எதிராக சதி வேளைகளில் சிலர் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

ரஜினி ஆதரவாளர்கள் என சொல்லிக்கொண்டு எக்ஸ் வலைதளத்தின் ஸ்பேசஸில் உரையாடிய சிலர் சுற்றுப்பயணத்தின் போது விஜய் மீது முட்டைகளை வீசி தாக்குதல் நடத்த வேண்டும் என பேசிய ஆடியோ வெளியாகி பகீர் கிளப்பி இருக்கிறது. “மார்ச் மாசம் தமிழ்நாடு முழுக்க அவன் சுற்றுப்பயணம் மேற்கொள்றான் ஓகேவா. அப்போ பீஸ் அழகா வரும். வண்டி மேல வந்து பாதி பாதி பாடி தெரியுற மாதிரி வரும் அப்போ சும்மா விடுற விடுல சர் சர் சர் சருன்னு இறங்கணும். மண்டையில் பட்டு முழுக்க நனைச்சிடனும்” என அந்த ஆடியோவில் பேசியுள்ளனர். இதற்காக தனி வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டு, பணம் சேர்க்கப்படுவதோடு, நாமக்கல்லில் இருந்து மொத்தமாக முட்டை கொள்முதல் செய்யப்போவதாகவும் பேசியுள்ளனர்.
இதையும் படிங்க: குடை கொடுப்பதெல்லாம் மன்ற செயல்பாடு...எப்போது அரசியல்வாதியாக மாறப்போகிறார் புஸ்ஸி ஆனந்த்

அழுகிய முட்டைகளை லாரி, லாரியாக வாங்கி வந்து விஜயை அடிக்க வேண்டும் என ஆவேசமாக பேசியுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் யார் என்ற போட்டியில் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் முட்டி மோதிக்கொண்டது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக சமூக வலைதளங்களில் இருவரின் ரசிகர்களும் கடுமையாக சண்டையிட்டு அந்த விவகாரம் பெரிதானதால் ரஜினி மற்றும் விஜய் இருவரும் தனித்தனியாக பேசி ரசிகர்களை அமைதியாக்கினர். ஆனால் குழந்தையை கிள்ளிவிட்டுவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதைப் போல தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் ரஜினியை மறைமுகமாக அட்டாக் செய்து பேசி மீண்டும் பிரச்சனையை பற்ற வைத்தார் விஜய்.

“இந்த அரசியல் எல்லாம் நமக்கு எதுக்குங்க நாம பாட்டுக்கு நடிச்சோமா நாலு காசு பார்த்தோமான்னு இருக்கலாம்னு தான் ஆரம்பத்துல நானும் நினைச்சேன். ஆனா நாம மட்டும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறது சுயநலம் இல்லையா?. நம்மள வாழ வச்ச இந்த மக்களுக்காக நாம் எதுவும் செய்யாம இருக்கிறது நல்ல விசுவாசமா இருக்குமா? ஒரு லெவலுக்கு மேல காசு சேர்த்து என்ன செய்யப்போறோம்?. இப்படி எல்லா கேள்விகளுக்கும் ஒட்டுமொத்தமா ஒரு விடையை கண்டுபிடிக்க யோசிச்சப்பதான் அரசியலை தேர்வு செய்தேன்” என விஜய் பேசியது சூப்பர் ஸ்டார் ரசிகர்களை சூடாக்கி இருந்தது.

இப்படிப்பட்ட சூழலில்தான் இந்த ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் தேவைக்கு பின்னர் தற்போது விஜய் நடிகர் என்பதைத் தாண்டி அரசியல் கட்சித் தலைவர் என்பதால்
பொதுவெளியில் அவர் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இதை விஜயிடமே சொல்லி விட்டேன்… திமுகவுக்கு இதுதான் வழக்கம்… மிகப்பெரிய அபாயம்..! எச்சரித்த பிரேமலதா..!