இன்று நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை இந்தியா அண்டை பின்பற்றி வருகிறது. எனவே 202425 ஆம் நிதி ஆண்டு கணக்குகளை மார்ச் 31ஆம் தேதியுடன் அரசு முடிக்க வேண்டும் என்பதற்காக மார்ச் 31ஆம் தேதியான இன்று ரம்ஜான் பண்டிகை என்றாலும் வங்கிகள் வழக்கம் போல் செயல்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையில், அனைத்து வங்கிகள் மற்றும் அரசாங்க வருவாய் மற்றும் செலவுகளை நிர்வகிக்கும் கிளைகள் மார்ச் 31ஆம் தேதி யான இன்று வழக்கமான பணி நேரத்தில் பணியாற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக அரசு ரசீதுகள் மற்றும் பண பரிவர்த்தனைகளை கையாளும் வங்கிகள் அவசியம் வழக்கமான நேரபடி திறந்து இருக்க வேண்டும் எனவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஏடிஎம் யூசர்களுக்கு வந்த சோதனை... ஷாக் கொடுத்த ரிசர்வ் வங்கி!!

அரசு பரிவர்த்தனைகள் தொடர்பான கவுண்டர் பரிவர்த்தனைகளுக்காக வங்கிகள் திறந்து இருக்க வேண்டும் என்றும் மார்ச் 31 ஆம் தேதியிட்ட காசோலை அன்றே கிளியர் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டுக்கான அனைத்து அரசு பரிவர்த்தனைகளை 2025 ஆம் ஆண்டு மார்ச் 31க்குள் கணக்கிட்டு கொள்ள வசதியாக இன்றைய தினம் காசோலைகளுக்கு பிரத்தியேகமாக CTS இன் கீழ் சிறப்பு தீர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அரசுக்கு செலுத்த வேண்டிய வரி, கட்டணங்கள் ஆகியவற்றை இன்றே செலுத்தலாம் என்றும் இதர பொதுவான வங்கி சேவைகள் என்று இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், வருமான வரித்துறையும் வரி சம்பந்தப்பட்ட பணிகள் இடையூறு இன்றி செயல்பட முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதையும் படிங்க: பிரித்தாளுவதற்காக உகாதி வாழ்த்து கூறுகிறார்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது தமிழிசை காட்டம்.!!