அவர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்து தற்கொலைக்கு தூண்டியதாக புகார் கொடுப்பதும் அதன் மீது போலீசார் அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்வதும் தற்போது வாடிக்கையாக இருந்து வருகிறது.
ஆனால் இது போன்ற வழக்கு ஒன்றில் காதல் ஜோடி ஒருவருடைய திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் பெற்றோர் மீது தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு ஒன்றை வழங்கி இருக்கிறது.
அதாவது, திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததை தற்கொலைக்கு தூண்டுவதாக கருத முடியாது என்பதுதான் அந்த தீர்ப்பின் சாரம்சமாகும். இந்த வழக்கு பற்றிய விவரம் வருமாறு:-
இதையும் படிங்க: முதியோர் இல்லத்தில் காதல் திருமணம்: 68 வயது மணமகளை கரம் பிடித்தார் 64 வயது மணமகன்

தனது மகனை காதலித்த பெண்ணைத் தற்கொலைக்குத் தூண்டியதாக ஒரு தாயின் மீது வழக்குப் பதியப்பட்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் பி. வி. நாகரத்னம், சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அதன்படி , மேல்முறையீடு செய்த பெண்ணின் மகனுக்கும், உயிரிழந்த அவரது காதலிக்கும் இடையேயான தகராறு காரணமாக அவர் உயிர் இழந்ததால் பதியப்பட்டது.
அதில், உயிரிழந்த பெண்ணை தவறாகப் பேசி, திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாக மேல்முறையீடு செய்த பெண்ணின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

"குற்றப்பத்திரிகை, சாட்சிகளின் வாக்குமூலங்கள் உட்பட பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து ஆதாரங்களும் சரியானவை என்று எடுத்துக் கொண்டாலும், மேல்முறையீடு செய்தவருக்கு எதிராக ஒரு சிறிய ஆதாரம் இல்லை" என்று, தீர்ப்பில் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
” இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 306ன் கீழ் அந்தப் பெண்ணின் மீதான குற்றச்சாட்டுகள் மறைமுகமாக இருக்கின்றன. மேல்முறையீடு செய்தவர் மீது இயற்கையாக எந்தக் குற்றமும் இல்லை. தற்கொலை செய்துகொண்ட பெண் அவருக்கு அதைத் தவிர வேறு வழியில்லை என்று துரதிஷ்ர்டவசமாக முடிவெடுத்துள்ளார்.
மேல்முறையீடு செய்தவர் இறந்த பெண்ணிற்கும் அவரது மகனுக்குமான உறவை முறித்துக் கொள்ள எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை என்று விசாரணை பதிவுகள் மூலம் தெரிய வருகின்றது.
இறந்த பெண்ணின் குடும்பத்தினரே இந்த உறவு குறித்து மகிழிச்சி இன்றிதாறன் இருந்துள்ளனர். இறந்த பெண்ணிற்கும் தனது மகனுக்குமான திருமணத்திற்கு ஒப்புதல் வழங்காதது தற்கொலைக்குத் தூண்டுவதாக ஆகாது.

மேலும், அந்தப் பெண் இறந்தாலும் காதலனை அவருக்குத் திருமணம் செய்து வைக்க முடியாது என்று கூறுவதும் தற்கொலைக்குத் தூண்டுவதாகாது.
ஐபிசி 306 பிரிவின் படி, இறந்த நபரை நேரடியாக தற்கொலைக்குத் தூண்டும் சூழலை உருவாக்குவதே தண்டனைக்குரியதாகக் கருதப்படும்” என்று நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.
மேலும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நீதிபதிகள், "தற்கொலை செய்து கொண்டவர் திருமணம் செய்ய முடியாவிட்டால் உயிருடன் இருக்கக் கூடாது என்று பரிந்துரைக்கும் கருத்துக்கள் கூட தனிநபரை அத்தகைய நடவடிக்கையை எடுக்க கட்டாயப்படுத்தும் சூழலை உருவாக்கினால் தவிர அவை தூண்டுதலாக இருக்காது" என்றும் அழுத்தமாக குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
இந்திய தண்டனைச் சட்டம் 36 ஆவது பிரிவினில் தூண்டுதல் அல்லது வற்புறுத்தலின் தெளிவான நேர்மறையான செயலின் தேவையை இந்த தீர்ப்பு வலுப்படுத்துகிறது.
இதையும் படிங்க: நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்கு மறுத்த, 20 வயது மகள் சுட்டுக்கொலை: போலீஸ், பஞ்சாயத்தார் முன்னிலையில் தந்தை வெறிச் செயல்...