தனது நாடாளுமன்றத் தொகுதியான நாக்பூரில் கழிப்பறை நீரை விற்பனை செய்வதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.300 கோடி வருவாய் ஈட்டப்படுவதாக அவர் தெரிவித்து ஆச்சரியப்படுத்தி உள்ளார் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி.

கழிவு மேலாண்மை தொடர்பான கண்டுபிடிப்புகளுக்கும், வெற்றிகரமான யோசனைகளுக்கு புகழ்பெற்றவர்.இதுகுறித்து பேசிய அவர், ''நீர் மறுசுழற்சி மிக முக்கியமானது. நாக்பூர் நகராட்சி கழிப்பறை நீரை மறுசுழற்சி செய்து விற்று அதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.300 கோடி வருவாய் ஈட்டுகிறோம். 2017- 2019 க்கு இடையில் நீர்வளம், நதி மேம்பாடு, கங்கை பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது, மதுராவில் முதல் வெற்றிகரமான நீர் மறுசுழற்சி திட்டம் நிறைவடைந்தது.
இதையும் படிங்க: மீண்டும் மீண்டுமா? வாகன ஓட்டிகளை ஏமாற்றிய நிதின் கட்காரி!!

பொது-தனியார் கூட்டாண்மையின் கீழ் இந்தத் திட்டத்தை நிறைவு செய்தோம். இதில், மதுரா நகரத்தின் கழிவு நீர் மறுசுழற்சி செய்யப்பட்டு இந்தியன் ஆயிலின் மதுரா சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.20 கோடிக்கு விற்கப்பட்டது. இந்த திட்டம் 40/60 பங்கேற்புடன் முடிக்கப்பட்டது. இதில் அரசு 40% முதலீடு செய்தது. தனியார் நிறுவனங்கள் 60% தொகையில் முதலீடு செய்தனர்.

அந்த நேரத்தில் மதுராவில் 90 மில்லியன் லிட்டர் வண்டல் மண் இருந்தது. நான் நீர் விநியோக அமைச்சராக இருந்தேன். நாங்கள் ஒரு திட்டத்தை உருவாக்கினோம்.இந்த திட்டத்தில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை, நாங்கள் மதுரா சுத்திகரிப்பு நிலையத்திற்கு விற்றோம். இதற்கு முன்பு ஐ.ஓ.சி. தலைவரிடம் மதுரா சுத்திகரிப்பு நிலையத்திற்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்று கேட்டோம். எவ்வளவு பணம் கொடுப்பீர்கள்? என்று கேட்டோம்.

அவர், 'நாங்கள் உ.பி.அரசிடமிருந்து தண்ணீரைப் பெற்று, ஆண்டுதோறும் ரூ.25 கோடி வழங்குகிறோம்' என்றார். "நாங்கள் கழிப்பறை நீரை விற்று ஆண்டுக்கு ரூ.300 கோடி சம்பாதிக்கிறோம் என்பதை நீங்கள் நம்ப மாட்டீர்கள். இது சுவாரஸ்யமானது... மிகவும் சுவாரஸ்யமானது. இந்த தண்ணீரை ஒவ்வொரு நகரத்திலும் உள்ள தொழிற்சாலைகள் மறுசுழற்சி செய்து பயன்படுத்தினால், திடக்கழிவு மேலாண்மை மற்றும் திரவக்கழிவு மேலாண்மை ஒரு சிறந்த கொள்கையாக மாறும்" என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
இதையும் படிங்க: தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் நிரந்தரம்.. பொதுமக்களுக்கு ஷாக் கொடுத்த நிதின் கட்கரி..!!