மகாராஷ்டிரின் நாக்பூரில் அமைந்துள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமை அலுவலகத்துக்கு பிரதமர் மோடி இன்று சென்றுள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பை நிறுவிய ஹெட்கேவார், கோல்வால்கர் ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்ற பிரதமர் மோடி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
பிரதமர் மோடியுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் உடன் சென்றனர்.

நாக்பூரில் உள்ள ஸ்மிருதி பவனில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த பிரதமர் மோடி, அங்குள்ளவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். பிரதமர் மோடி, பிரதமராக பதவி ஏற்றபின் ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்துக்கு இப்போதுதான் முதல்முறையாக வந்துள்ளார்.
இதையும் படிங்க: அடுத்த பாஜக தேசிய தலைவர் யார்..? நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை..!

நாக்பூரில் மாதவ நேத்ராலயா மையத்துக்கு அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டினார். அதன்பின் அங்கு நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில் “ ஆர்எஸ்எஸ் அமைப்பு என்பது நவீன கால 5100 ஆண்டுகால பழமையான அழியாத ஆலமரம், இந்தியாவின் அழியாத கலாச்சாரத்தின் அடையாளம்.
ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருப்போர் சுயநலமின்றி மக்களுக்கு பல்வேறு சேவைகளில் ஈடுபடுகிறார்கள், தேசப்பணிக்காக அர்ப்பணித்துள்ளனர். தேசக் கட்டமைப்பிலும், சமூக சேவையிலும், கலாச்சாரத்தை காப்பதிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.

அழியாத ஆலரம்(வத் விருட்சம்) என்ற வார்த்தை நூற்றாண்டுகளுக்கு முன்பே விதைக்கப்பட்டுள்ளது. உயர்ந்த கொள்கைகளையும், சிந்தனைகளையும் ஆர்எஸ்எஸ் வழங்குகிறது. லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான தொண்டர்கள், காரியகர்த்தாக்கள்தான் அதன் கிளைகள். ஆர்எஸ்எஸ் அமைப்பை எளியாக அழியாத ஆலமரம் என்று சொல்ல முடியாது. இது நவீன காலத்தில் 5100 ஆண்டுகால அழியாத ஆலமரம் இந்தியாவின் அழியாத கலாச்சாரம்.
பல்வேறு விழாக்கள்,பண்டிகைகள் தொடங்குகின்றன. கூடிபத்வா, உகாதி, நவரே ஆகியவை நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படுகின்றன. இது ஆர்எஸ்எஸ் அமைப்பின் 100-வது ஆண்டு. எனக்கு இங்கு வருவதற்கும், ஸ்மிருதி கோயிலில் வணங்கவும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

நாம் தேசத்தின் 75வது சுதந்திரதினத்தைக் கொண்டாடுகிறோம். அடுத்தமாதம் பிஆர்அம்பேத்கரின் பிறந்தாள் வருகிறது. இந்த தீக்சபூமயில் நான் ஆசி பெற்றதை நினைவுகூறுகிறேன். மக்கள் அனைவருக்கும் நவராத்திரி, ராமநவமி, புத்தாண்டு வாழ்த்துகள்
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஏன் இந்த ஆர்வக்கோளாறு..? திமுக தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்: வெடிக்கும் ஆர்.எஸ்.எஸ்..!