சவுதி அரேபியாவில் விபச்சாரம், பிச்சை எடுத்த குற்றச்சாட்டில் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் உத்தரவின் பேரில் உருவாக்கப்பட்ட புதிய காவல் பிரிவால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சவுதியின் 'ஒழுக்கக்கேடான செயல்களை' கண்காணிக்கவும், அத்தகைய வேலைகளைச் செய்பவர்களைப் பிடிக்கவும் இந்தப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் இந்தப் புதிய பிரிவு, சமூகப் பாதுகாப்பு, மனித கடத்தலைக் கையாள்வதற்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய பிரிவு விபச்சாரக் குற்றச்சாட்டில் 11 பெண்களைக் கைது செய்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் சவுதி அதிகாரிகள் நாட்டில் விபச்சாரம் இருப்பதாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டது இதுவே முதல் முறை. மசாஜ் நிலையங்களில் "ஒழுக்கக்கேடான செயல்களில்" ஈடுபட்டதற்காகவும், பெண்கள், குழந்தைகளை பிச்சை எடுக்க கட்டாயப்படுத்தியதற்காகவும் பல வெளிநாட்டினரை இந்தப் பிரிவு கைது செய்துள்ளது.
இதையும் படிங்க: முஸ்லிம்களின் அனுதாபியாக மாறிய ஜெலென்ஸ்கி... அமரிக்காவுடன் சேர்ந்து முதுகில் குத்திய சவுதி இளவரசர்..!

சவுதி அரேபியாவில் உள்ள இந்தப் புதிய பிரிவு, நாட்டின் மதக் காவல் படையான 'நல்லொழுக்கத்தை மேம்படுத்துவதற்கும் தீமைகளைத் தடுப்பதற்கும் குழு'வுடன் ஒப்பிடப்படுகிறது. இந்தப் படை தார்மீக விதிகளைச் செயல்படுத்துவதற்குப் பெயர் பெற்றது. சவுதி அரசு 2016- அதன் அதிகாரங்களைக் குறைத்தது. இது முகமது பின் சல்மானின் பொருளாதாரத்தை பன்முகப்படுத்தவும் கடுமையான சமூக-மத விதிகளை தளர்த்தவும் மேற்கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டது.

இந்தப் புதிய பிரிவு உருவாக்கப்பட்டதற்கான காரணம் தெளிவாக இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நெறிமுறை மீறல்கள் அதிகரித்து வருவதால் சமூக பாதுகாப்பு பிரிவு உருவாக்கப்பட்டது என்று கூறுகிறார். இதுபோன்ற நடவடிக்கைகளுக்கான விளம்பரங்கள் சமூக ஊடக தளங்களில் வெளியாகி வருகின்றன. இது சவுதி சமூகத்தின் பிம்பத்தை சேதப்படுத்தி உள்ளது. இந்நிலையில், இதைத் தடுக்க அரசின் மீது அழுத்தம் அதிகரித்தததால் இந்தப் பிரிவு உருவாக்கப்பட்டது.

சவூதி அரேபியாவில் உள்ள சமூக ஊடக பயனர்கள், சமூகப் பாதுகாப்புப் பிரிவு மதக் காவல்துறைக்குத் திரும்புவதாகக் கூறுகிறார்கள். இந்த முறை அதன் நிறம் மற்றும் தோற்றம் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும், பலர் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளனர். மனித கடத்தல், போதைப்பொருள் மற்றும் விபச்சாரத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது நல்லது என்று சமூக பயனர்கள் நம்புகிறார்கள்.
இதையும் படிங்க: ஆர்.எஸ்.எஸ் மோடி வாழ்க்கையில் எவ்வளவு முக்கியத்துமானது..? நெகிழ்ந்து சொன்ன பிரதமர்..!