மதுரை மாவட்டம் காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவர் பப்ஜி கேமில் மிகுதியான ஆர்வம் ஏற்பட்டு அதற்கு அடிமையாகி உள்ளார். பப்ஜி கேம் இருக்காக மாணவன் பள்ளிக்கு கூட செல்லாமல் விளையாடிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போக்கு மாணவர்களின் வளர்ச்சிக்கு கை கொடுக்காதே என நினைத்த பெற்றோர், அந்த மாணவனை எப்படியாவது பள்ளிக்கு அனுப்பி விட வேண்டும் என நினைத்துள்ளனர்.

இந்த நிலையில் மாணவன் தொடர்ந்து ஓராண்டு பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளார். இதனால் மாணவன் வீட்டில் பெற்றோர் மற்றும் யாரிடமும் பேசாமல் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவனின் தாயார் வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது மாணவன் வீட்டில் இல்லாததை அறிந்த மாணவனின் தாயார், மாணவன் குறித்து அவரது தந்தையிடம் விசாரித்துள்ளார்.
இதையும் படிங்க: மாயமான மாணவர் சடலமாக மீட்பு.. கொலையா..? தற்கொலையா..? என விசாரித்து வரும் போலீசார்
அப்போது மாணவன் வெளியில் சென்றுள்ளதாக தந்தை கூறியுள்ளார். இதனால் சமாதானம் அடைந்த தாயார் வெகு நேரமாக மாணவனுக்கு காத்து இருந்துள்ளார். அப்போது அந்த மாணவன் திடீரென வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்து ஓடி வந்த தாயார் மகன் ரத்த வெள்ளத்தில் பேச்சு மூச்சு இன்றி மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனை அடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மாணவன் அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்னதாகவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தகவல் அறிந்தது சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவன் உயிரிழப்பு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படும் மாணவன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது இதற்கு பின்னால் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடிக்கு உடனே புது ரோடு வேணும்..! நிதின் கட்கரியிடம் கறார் காட்டிய கனிமொழி..!