தேனி மாவட்டம், ராஜாகளம் என்னுமிடத்தில் உள்ள 40 செண்ட் பஞ்சமி நிலம், 1991 ம் ஆண்டு மூக்கன் என்பவருக்கு ஒதுக்கப்பட்டது. நிபந்தனையின் படி, 15 ஆண்டுகளுக்கு நிலத்தை வேறு யாருக்கும் உரிமை மாற்றம் செய்ய முடியாது. அதன்பிறகும், அந்த நிலத்தை பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே ஒதுக்க முடியும்.
இந்த நிபந்தனையை மீறி, மூக்கன் இந்த நிலத்தை பட்டியலினத்தைச் சாராத ஹரி சங்கர் என்பவருக்கு 2008ம் ஆண்டு எழுதிக் கொடுத்துள்ளார். ஹரிசங்கரிடம் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அந்த நிலத்தை வாங்கி, தனது பெயரில் பட்டா வாங்கியுள்ளார்.

நிபந்தனையை மீறி நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மூக்கனின் மகன் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மாநில பட்டியலின மற்றும் பழன்க்குடியினத்தவர் ஆணையத்தில் புகார் அளித்தார்.
இதையும் படிங்க: விஜய் கட்சிக்கு NO.. புதிய அமைப்பு தொடங்கிய ஜூனியர் ஓபிஎஸ்.. பரபரக்கும் அரசியல் களம்..!
இந்த புகாரை விசாரித்த ஆணையம், பஞ்சமி நிலத்தை பன்னீர்செல்வம் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வாங்கியதற்கு ஆதாரங்கள் உள்ளதாகக் கூறி, அந்த நிலத்துக்கு அவர் பெயரில் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய உத்தரவிட்டது.

முறையற்ற வகையில், நிலத்தை மாற்றிக் கொடுத்த தாசில்தாரர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினஎ நலத்துறை அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆணையம், அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
நிலம் வாங்குவோர் தாய் பத்திரங்களை முழுமையாக பரிசோதிக்க வேண்டும். பஞ்சமி நிலங்களை மாற்றம் செய்வது தொடர்பான கோரிக்கைகளை ஏற்கக் கூடாது என சுற்றறிக்கைகள் பிறப்பிக்கும்படி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாவட்ட பதிவாளர்களுக்கும் ஆணையம் ஆலோசனை வழங்கியுள்ளது.
இதையும் படிங்க: தவெக பாஜகவின் பி டீமா? - மகிழ்ச்சியில் துள்ளி குதித்த தமிழிசை... திமுகவுக்கு செம்ம நோஸ்கட்...!