நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், டிஐஜி வருண்குமாருக்கும் மோதல் வலுத்து வருகிறது. இதனையடுத்து நேற்று முந்தினம் செய்தியாளர்களை சந்தித்த வருண்குமார், “வீட்டில் புலி வெளியே எலி என்பார்கள். அதுபோல சீமான் மைக் முன்பு பேசினால், புலி போல் பேசுவார் பேசியதெல்லாம் பேசிவிட்டு என்னிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஒரு தொழிலதிபர் மூலம் முயற்சி செய்தார். ஆனால் நான் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என ஏற்கனவே கூறியிருந்தேன். அவர் அதை செய்யவில்லை.
இனிமேல் பொதுவெளியில் சீமான் மன்னிப்பு கேட்டாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். அவர் முறைப்படி நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரி மனு அளித்தால் அதன் பிறகு எனது நிலைப்பாடு குறித்து தெரிவிப்பேன். நான் சாதாரண குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தவன் மிகவும் கஷ்டப்பட்டு காவல்துறை பணியில் சேர்ந்துள்ளேன். இதற்காக பல தியாகங்களை செய்துள்ளேன்.

நான் அணிந்திருக்கும் காக்கி உடையை கழட்டி வைத்து விட்டு ஒண்டிக்கு ஒண்டி வா பார்ப்போம் என சீமான் சொல்கிறார். நான் ஓய்வு பெற்றாலும் அவர் மீதான வழக்கை தொடர்ந்து நடத்துவேன்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை விவகாரம்; அதிரடி காட்டும் அண்ணாமலை... மதுரை To சென்னை மகளிர் பேரணி
ஏற்கனவே காக்கி சட்டையை கழட்டி வைத்துவிட்டு வா என பேசியவர் தற்பொழுது எனக்கும் வருண் குமாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என பேசுகிறார். சீமானின் பேச்சில் குழப்பமும் பொய்யும்தான் எப்பொழுதும் இருக்கிறது" என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், சீமான், மன்னிப்பு கேட்க வேண்டும் என ஒரு தொழிலதிபர் மூலம் முயற்சி செய்தார் என வருண்குமார் கூறியதை மையப்படுத்தி திமுக ஆதரவாளர் சுந்தரவள்ளி தனது எக்ஸ் தளப்பதிவில், “3 ஆண்டுகளுக்கு முன் சீமானை தொவச்சி தொங்கப்போட்டுட்டு இருந்த காலம் அது. நெல்லை கண்ணன் அப்பா திடீர்னு எனக்கு கால் செய்தார்.
ஏன் சீமானை இப்படி தொவைக்கிற என்றார். சீமான் கால் பண்ணி பொலம்பினான் என்றார். ஆக நெல்லை கண்ணன் அப்பாவிடம் பேசி என்னை ஆப் பண்ண பேசியவர் தான் சீமான். என்னை பேச விடக்கூடாது என நெல்லை கண்ணன் அப்பாவை பேச வைத்ததை என்னிடம் மறுப்பாரா சீமான். நெஞ்சை நிமிர்த்தி பேசு பார்ப்போம்’எனத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவிற்காக பதிலடி கொடுத்து சுந்தரவள்ளியை சுளுக்கெடுத்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
இதையும் படிங்க: வந்த உடனேயே கைதா? ஆர்ப்பாட்டம் நடத்த விடுங்கப்பா? போலீஸாரிடம் கொந்தளித்த சீமான்