பிரிந்து இருக்கும் சக்திகள் ஒன்றிணைய வேண்டும். ஈகோவை விட்டு கொடுத்து அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை மீட்க வேண்டும். 2026ல் ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும்" என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாணியம்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், ''பிரிந்து இருக்கும் சக்திகள் ஒன்றிணைய வேண்டும். ஈகோவை விட்டு கொடுத்து அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை மீட்க வேண்டும். 2026ல் ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும். அமைச்சர் செங்கோட்டையனுக்கும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடிக்கும் இடையே கருத்துவேறுபாடு உள்ளதாக கூறுவது சம்பந்தப்பட்டவர்கள் தான் பதில் அளிக்க வேண்டும்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தெலங்கானாவில் தேர்வு மையமா? இ.பி.எஸ். கண்டனம்
இருந்தாலும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவின் மூத்த நிர்வாகியாக செயல்பட்டு வந்தவர். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருடன் சிறப்பாக பணியாற்றியவர்.

வரி கட்டாமல் மது பாட்டில்களை நேரடியாக டாஸ்மார்க் கடைகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வது ஒரு மோசமான செயல். தற்போதுதான் சோதனைகள் நடைபெற்று வருகிறது. சோதனை முடிந்த பின்னர் யார் தவறு செய்துள்ளார்கள் என்பது தகவல் வெளியாகும்.
முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் அதிமுகவை யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக வைத்திருந்தார்கள். அதே போன்று பிரிந்து உள்ள அதிமுக சக்திகள் ஒன்று சேர்ந்து 2026 ஆம் சட்டமன்ற தேர்தலை சந்தித்தால் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்.

அன்பு சகோதரர் சிறந்த திரைப்பட நடிகர் விஜய். அவர் அரசியல் கட்சியை துவக்கி உள்ளார். அந்த இயக்கம் எந்த இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அவர் கொள்கை முடிவு தெரிவித்த பின்னர் அதற்கான பதிலை நான் தருகிறேன்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கட்சியை விட்டுவிலகியவர்களின் நிலைமை தெரியுமா..? செங்கோட்டையனுக்கு அதிமுகவின் ஆவேச அட்டாக்..!