ஜார்க்கண்ட் மாநிலத்தில் மகாசிவராத்திரி விழாவிற்கான அலங்காரப் பணிகள் மேற்கொள்வதில் இரு சமூகத்தினர் இடையே கலவரம் வெடித்தது.

இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிப்பாக்கில் இச்சாக் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட பகுதியில் சிவராத்திரி விழாவிற்கு அலங்கார பணிகள் மேற்கொள்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தும்ரானில் உள்ள இந்துஸ்தான் சவுக்கில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொடி மற்றும் ஒலிபெருக்கியை நிறுவ முயன்றதாக தெரிகிறது.
இதையும் படிங்க: டிராபிக்கை குறைக்க இதுதான் வழி! அரசுக்கு காவல்துறை வழங்கிய முக்கிய பரிந்துரைகள்

இதனை மற்றொரு சமூகத்தினர் எதிர்த்ததால் மோதல் ஏற்பட்டுள்ளது. மாறி மாறி தாக்கி கொண்டதுடன் கல்வீச்சு சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. மேலும் மோட்டார் சைக்கிள்கள், கார், டெம்போ உள்ளிட்டவகளுக்கு தீ வைத்தும் எரித்துள்ளனர். மேலும் ஒரு கடையையும் தீ வைத்து எரித்ததாக தெரிகிறது.இதனால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழ்நிலையில் காணப்பட்டது.
இதையும் படிங்க: இராணுவ விமானம் வெடித்து பயங்கர விபத்து..! 46 பேர் உயிரிழந்த சோகம்..!