சென்னை நங்கநல்லூர் தில்லை கங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் முரளிதரன். (வயது-66). தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரோகிணி (வயது-60). முரளிதரன் - ரோகிணி தம்பதி கடந்த 30 வருடங்களாக நங்கநல்லூரில் சொந்த வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். முதலாவது மகன் பிரசன்னா வெங்கடேஷன். இரண்டாவது மகன் ஆதித்யநாராயணன் (வயது-28). பொறியியல் பட்டதாரியான ஆதித்யநாராயணன், படிப்பை முடித்துவிட்டு பெற்றோருடன் வசித்து வருகிறார். ஆதித்ய நாராயணன் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 5 வருடங்களாக அவர், மனநிலை பாதிப்பிற்கான சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. தாய் ரோகிணியும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட தாய், மகன் இருவரையும் முரளிதரன் கவனித்து வந்துள்ளார். ஆனால் சிகிச்சை பெற்று வந்த ஆதித்யநாராயணன் அவரது தந்தை முரளிதரனிடம் அடிக்கடி பிரச்னை செய்து வந்ததாக கூறப்படுகிறது. என்னையும் என் தாயையும் நீங்கள் சரியாக கவனித்துக் கொள்ளவில்லை எனக்கூறி அடிக்கடி பிரச்னை செய்த ஆதித்யநாராயணன், முரளிதரனை அடித்தும், தாக்கியும் வந்துள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த தந்தை முரளிதரன், இதேபோல் பைத்தியம் மாதிரி செய்து கொண்டிருந்தால் உங்கள் இருவரையும் விஷம் வைத்து கொன்று விடுவேன் என எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோவமான, ஆதித்ய நாராயணன் தனது தந்தை முரளிதரன் சென்று, வழக்கம் போல் எங்களை ஏன் சரியாக கவனித்துக் கொள்ளவில்லை எங்களை நீ கொன்று விடுவாயா என கேட்டு பிரச்சனை செய்துள்ளார்.
இதையும் படிங்க: அம்மாடியோவ்! 14 வது குழந்தைக்கு அப்பாவான பிரபலம்!!

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாகி உள்ளது. ஆத்திரமடைந்த ஆதித்யநாராயணன் வீட்டிலிருந்த கத்திரிக்கோலை எடுத்து முரளிதரன் காதின் கீழ் பகுதியிலும்,தொண்டையிலும் குத்தி உள்ளார். முரளிதரன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்ததும், அவரது தாய் ரோகிணியை வாடகை ஆட்டோவில் அழைத்து கொண்டு உறவினர் வீட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார் ஆதித்ய நாராயணன். அப்போது அவரது சகோதரர் பிரசன்னா வெங்கடேசனுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஆதித்யநாராயணன், தனக்கும், தந்தைக்கும் தகராறு ஏற்பட்டதை தெரிவித்துள்ளார். கோவத்தில் அவரை அடித்து விட்டதாகவும், அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உடனே வீட்டிற்கு சென்று தந்தையை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துசெல் என்றும் கூறிவிட்டு போனை கட் செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பிரசன்ன வெங்கடேசன் உடனடியாக அவரது தந்தை வீட்டிற்கு சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். சோபாவில் அதிகப்படியான ரத்தம் வெளியேறிய நிலையில் சரிந்து கிடந்து உள்ளார் முரளிதரன். அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் பிரசன்ன வெங்கடேஷன். அங்கு முரளிதரனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே ஆட்டோவில் ரத்த காயங்களுடன் ஏறிய ஆதித்ய நாராயணன், சகோதரரிடம் செல்போனில் தெரிவித்ததை கேட்டுக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனர், ஆதித்யா நாராயணன் மற்றும் அவரது தாய் ரோகிணி இருவரையும் திருவல்லிக்கேணி காவல் நிலையம் அழைத்துச் சென்று விட்டுள்ளார். ஆட்டோவில் அவர்கள் பேசிக்கொண்டது பற்றியும் தெரிவித்துளார். சுதாரித்த போலீசார் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் மடிப்பாக்கம் உதவி ஆணையர் மற்றும் ஆதம்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் உதவியாளையாளர் மற்றும் ஆதம்பாக்கம் காவல் ஆய்வாளர் திருவல்லிக்கேணி காவல் நிலையம் சென்று இருவர் இடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: துபாயில் தந்தை- மகன் நீரில் மூழ்கி பலி.. நெல்லையில் தாய் தற்கொலை முயற்சி... பதற வைக்கும் சம்பவம்!