×
 

சீமான் மீது பாய்ந்தது 60 வழக்குகள்...ஆடிப் போய் உள்ள நா.த.க!

பெரியார் குறித்து அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 60க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

பெரியார் குறித்து அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 60க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து அவதூறு கருத்துக்களைக் கூறியதாக, நேற்று நெல்லை, மதுரை, கோவை, நாகை, சீர்காழி, பொள்ளாச்சி, கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள காவல்நிலையங்களில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் புகார் அளித்தனர். 

சென்னையில் சீமான் மீது திமுக சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டது. திமுக சட்டத்துறை துணை செயலாளர் மருது கணேஷ் வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்திருந்தார். 

இதையும் படிங்க: "மானங்கெட்ட சீமானே வெளியே வா "- தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஆவேசம்! 

இந்த புகார் மனுவில் தந்தை பெரியார் பற்றியும், அவர் சொல்லாத கருத்துக்களை, ஆதாரமற்ற, ஆபாசமான அருவருக்கத்தக்க தரவுகளற்ற செய்தியை பெரியார் சொன்னதாக கூறி தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் எனவும், சமூக பதட்டத்தையும் வன்முறையையும் கலவரத்தையும் தூண்டும் நோக்கில் திட்டமிட்டு பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

இதனையடுத்து, நேற்று வடலூர் காவல்நிலையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கலவரத்தை தூண்டும் விதமாக பேசுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டன. 

இந்நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு காவல்நிலையங்களில் சீமான் மீது 60க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து சீமானை கைது செய்வது தொடர்பாக காவல்துறையினர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

இதையும் படிங்க: “உன்ன எங்க போனாலும் விடமாட்டோம்” - சீமானை எச்சரித்த கு.ராமகிருஷ்ணன்! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share