பூனைக்காக அக்கப்போரா? - உயிரையே விட்ட பெண்!!
தன்னுடைய வளர்ப்பு பூனை இறந்ததால் மன உளைச்சலில் பெண்ணும் தற்கொலை செய்து கொண்ட சோகம் உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
தன்னுடைய வளர்ப்பு பூனை இறந்ததால் மன உளைச்சலில் பெண்ணும் தற்கொலை செய்து கொண்ட சோகம் உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
நாய், பூனை போன்ற வளர்ப்பு பிராணிகள் மீது மனிதர்களுக்கு பாசம் அதிகம். குழந்தைகளை காட்டிலும் வளர்ப்பு பிராணிகள் மீது அதிக பாசத்தையும், அக்கறையையும் காட்டும் சிலர் இருக்க தான் செய்கிறார். சிலர் தங்களின் வளர்ப்பு பிராணிக்கு எதாவது விபரீதம் நேர்ந்தால் கண்ணீர் விட்டு அழுவது, சாப்பிடாமல் இருப்பது போன்ற சம்பவங்கள் நிகழ்வதுண்டு. ஆனால், ஒரு பெண் தான் வளர்த்த பூனை இறந்ததால் அதிர்ச்சியில் அவரும் தற்கொலை செய்து கொண்ட விநோதம் கேட்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அம்ஹோரா மாவட்டம் ஹசன்பூரை சேர்ந்தவர் பூஜா. இவருக்கு டெல்லியை சேர்ந்த ஒருவருடன் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. அந்த நபருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திருமணமான 2 ஆண்டுகளில் பூஜா விவாகரத்து பெற்றுள்ளார். அதன்பின்னர் தன்னுடைய தாய் வீட்டுக்கு வந்த பூஜா அவருடன் வசித்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: மூக்கின் வழியாக கொகைன் உறிஞ்சிய பெண்... கடைசியில் நடந்த ட்விஸ்ட்!!
தனிமையில் இருந்த பூஜாவுக்கு அப்போது பூனை ஒன்று கிடைத்துள்ளது. அதை தனது வளர்ப்பு பிராணியாக வளர்த்து வந்துள்ளார். பூனை மீது அதீத ஈர்ப்பு கொண்ட பூஜை அதை தன் குடும்பத்தில் ஒருத்தராக பார்த்துள்ளார். இந்த நிலையில் திடீரென அந்த பூனை இறந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பூஜா பூனை மீண்டும் வரும் என நினைத்து அதை தன்னுடன் வைத்துள்ளார்.
இந்த பூனையின் உடலை எரித்துவிடலாம் என பூஜாவின் தாயும், உறவினர்களும் கூறியுள்ளனர். அதை எல்லாம் கேட்காத பூஜா, பூனை தனக்காக மீண்டும் உயிருடன் வரும் என நம்பி கொண்டிருந்தார். 3வது நாளில் பூனை சடலத்தை பார்த்த பூஜா விபரீத முடிவை எடுத்துள்ளார். தனது அறைக்கு சென்றவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு அருகில் இறந்த பூனையின் உடலும் இருந்துள்ளது.
தன் மகளின் முடிவை பார்த்து அதிர்ச்சியான தாய் கத்தி கூச்சலிட்டார். உடனே அங்கு வந்த பார்த்த அப்பகுதியினர் வளர்ப்பு பிராணிக்காக உயிரையே விடும் அளவுக்கு செல்வார்களா என வியந்து பரிதாப்பட்டனர்.
இதையும் படிங்க: கர்ப்பமாக்கி ஏமாற்றிய காதலன் கொலை.. இருமல் மருந்தில் பூச்சிமருந்து கலந்து கொன்ற காதலி.. உள்ளாடைகளிலும் தெளித்து பழிவாங்கல்..!