இந்தி மொழிய திணிக்காதீங்க..! கையெடுத்து கும்பிட்ட நடிகர் வடிவேலு...!
இந்தி மொழியை திணிக்க வேண்டாம் என நடிகர் வடிவேலு கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தி திணிப்பு குறித்து திமுக மேடையில் பேசிய நடிகர் வடிவேலு யாரையும் கட்டாயப்படுத்த வேண்டாம் என்று கையெடுத்து கும்பிட்டார்.
கடந்த சில நாட்களாக அரசியலில் இருந்து விலகி இருந்த நடிகர் வடிவேலு சென்னையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், காகம் கா..கா.. என அதன் தாய் மொழியில் தான் பேசுவதாகவும், கிளி கீ..கீ... என அதன் மொழியில் தான் பேசுவதாகவும், நாய் வவ்... வவ் என அதற்கு உரித்தான மொழியில் தான் பேசுவதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: தனித்து இயங்கும் தமிழ்மொழி.. ஒன்றிய ஆட்சியாளர்கள் கண்ணை உறுத்துகிறது... முதலமைச்சர் ஸ்டாலின்..!
ஒவ்வொருவருக்கும் உண்டான மொழியில் தான் பேச முடியுமே தவிர அதனை மாற்றிக்கொள்ள யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. மாட்டினை போய்நாய் மாதிரி கத்த சொன்னால் எப்படி கத்தும்.. கிளியைபோல் காக்கா போல் கத்த சொன்னால் எப்படி கத்தும்..யாருக்கு என்ன வேணுமோ அதை கத்துக்கட்டும், யாரையும் கட்டாயப்படுத்தாதீங்கப்பா என்று கையெடுத்து கும்பிட்டார்.
தமிழ் மொழிக்கு சின்ன ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், அது வழக்கம்போல் வந்து கொண்டு தான் இருப்பதாகவும், தெரிவித்தார். எங்கள் நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு கலாச்சாரம் உள்ளது, ஒரு மொழி இருக்கிறது., இதுதான் அடையாளம்.,எங்கள் தமிழ்நாட்டிற்கு அடையாளம் தமிழ் தாய் தான் என கூறினார்.
வலிமையான தமிழ் மொழி முதலமைச்சரின் பார்வையில் உள்ளது என்று தெரிவித்தார்.இந்த மொழிக்காக என் உயிரையும் கொடுப்பேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறிய அந்த வார்த்தை தமிழக மக்களை எல்லாம் நெகிழ வைத்துள்ளது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு வரமாட்டோம்.. நாங்க தனியா போராடிக்கிறோம்.. தனி வழியில் சீமான்.!