அடிதூள்... அதிமுக சார்பில் ஜெயக்குமார் கொடுத்த ஐடியா... மெர்சலான முதல்வர்...!
மக்கள் தொகை குறைவாக உள்ளதால் தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகை குறைவாக உள்ளதால் தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் கூட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றுள்ளார். இந்த கூட்டத்தை தொடங்கிவைத்து உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தொகுதி மறுசீரமைப்பு நிறைவேற்றப்பட்டால் தமிழகத்தின் பிரதிநித்துவம் பாதிக்கப்படும் என்றும், தமிழகத்தின் உரிமைகள் எவ்வாறு பாதிக்கப்படும் என்றும் எடுத்துரைத்தார். திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதிக்கு அடுத்ததாக அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உரையாற்றினார். அப்போது தொகுதி மறுவரையில அதிமுகவுடைய நிலைப்பாடு என்ன என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
மக்களவைத் தொகுதி வரையறை 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டது. தமிழ்நாடு போன்ற தென்மாநிலங்கள் கடுமையாக முயற்சி செய்து மக்கள் தொகை கட்டுப்படுத்தி உள்ளன. ஆனால் இதே போன்ற கடும் முயற்சிகளை வட மாநிலங்கள் செய்யாததால் அம்மாநிலங்களில் மக்கள் தொகை உயர்ந்துள்ளது. எனவே தமிழ்நாடு போன்ற தென்மாநிலங்கள் தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால், திறம்பட செயல்பட்டு மக்கள் தொகை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு மக்களவை தொகுதியில் குறைக்கப்பட்டு, அது தண்டனையாக அமையும் என வாதிட்டு வருவதால் மத்திய அரசும் இதற்கான முடிவை ஒத்திவைத்து வந்தது.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திடீர் கைது... அதிர்ச்சியில் அதிமுகவினர்..!
தற்போது தொகுதி மறுசீரமைப்பு முயற்சியை மத்திய அரசு மீண்டும் எடுத்துள்ளது. தற்போதுள்ள 39 நாடாளுமன்ற மன்ற உறுப்பின் எண்ணிக்கைக்கு குறையாமலும், தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்ட பின்னரும் இருக்கும்படியும் நிர்ணயம் செய்தால்தான் மக்கள் தொகை குறைத்த தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படாமல் இருக்கும். தற்போது உள்ள மொத்த மக்களவை தொகுதிகள் 543 என்பதை மாற்றாமல் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மக்களுடைய தொகுதியின் சராசரி மக்கள் தொகை அடிப்படையில் மறுசிறமைப்பு செய்தால் எந்த மாநிலத்திற்கும் பாதிப்பு ஏற்படாது. இந்த கருத்தை அனைத்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.
இதையும் படிங்க: 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு 26 சீட்டுதான் கிடைக்கும்.. பொசுக்குன்னு சொன்ன பெங்களூரு புகழேந்தி.!