×
 

ராணிப்பேட்டை காந்தி ஊழலின் உறைவிடம்.. பாஜக ஆட்சிக்கு வந்தால் சிறை தண்டனை நிச்சயம்..! அண்ணாமலை ஆவேசம்

ஊழலின் உறைவிடமாக திகழும் கைது கைத்தறி துறை அமைச்சர் காந்தி பாஜக ஆட்சிக்கு வந்தால் கட்டாயம் சிறை செல்வார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசமடைந்துள்ளார

ஒவ்வொரு ஆண்டும், ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகளில் கொள்ளையடிக்கும் அமைச்சர் காந்தி, இனியும் கைத்தறித் துறை அமைச்சராக நீடிக்கக் கூடாது. உடனடியாக, அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துவதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் இலவச காட்டன் வேட்டி சேலை திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் அமைச்சர் காந்தி ஊழல் செய்து கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.

நெசவு செய்யப் பயன்படுத்தப்படும் கிலோ ₹320 வரை விற்கப்படும் பருத்தி நூலைக் குறைவாகவும், அதில் பாதி விலையான ₹160க்கே கிடைக்கும் பாலியஸ்டர் நூலை அதிகமாகவும் வாங்கி வேட்டி தயாரித்து மக்களை ஏமாற்றியதை, தமிழக பாஜக சார்பாக, கோவையில் உள்ள ஜவுளி ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு செய்து கண்டறிந்து மிகப்பெரிய அளவில் ஊழல் செய்திருப்பதை வெளிப்படுத்தியதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

இதையும் படிங்க: பெண் ஏடிஜிபிக்கே பாதுகாப்பில்லை...மூடிமறைத்து மவுனமாக்க முயல்வதா...எடப்பாடி, அண்ணாமலை விமர்சனம்

இதுதொடர்பாக கடந்த ஆண்டு தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரகத்தில் ஆதாரங்களை ஒப்படைத்ததை அண்ணாமலை சுட்டிக்காட்டி உள்ளார். அந்த புகார் தொடர்பாக இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். 

கூட்டுறவு சங்கங்கள் என்ற பெயரில், தனது பினாமி நிறுவனங்கள் மூலம் மக்கள் பணத்தை நூதனமாகக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அமைச்சர் காந்தி, தான் செய்யும் ஊழலுக்கு, ஐஏஎஸ் அதிகாரி சண்முகசுந்தரம் தடையாக இருக்கிறார் என்பது தெரிந்ததும், அவரை கைத்தறித் துறையில் இருந்து பணிமாற்றம் செய்திருப்பதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டி உள்ளார். தனது பணியை சரியாகச் செய்து, ஊழல் நடப்பதை வெளிக்கொண்டு வந்த அரசு அதிகாரியை, பணிமாற்றம் செய்திருப்பது அதைத்தானே உறுதிப்படுத்துகிறது? இப்படி ஒரு ஆட்சி நடத்த அசிங்கமாக இல்லையா? என்பதும் அவரின் வினா.

வரும் 2026 ஆம் ஆண்டு, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் திமுகவின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார் என்பதை தெரிவித்துக் கொள்வதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதையும் படிங்க: டெல்லியில் ஆட்சியை பிடித்த பாஜகவின் அடுத்த அதிரடி: மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்ற புதிய வியூகம் 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share