×
 

அடேங்கப்பா..! ரூ.1754 கோடி தேர்தலுக்காக செலவு செய்த பாஜக... வருமானத்திலும் முதலிடம்..!

2023-24ம் ஆண்டு நடந்த தேர்தல் அல்லது பரப்புரைக்காக பாஜக ஆயிரத்து 754 கோடி ரூபாய் செலவு செய்ததாக ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு (ஏடிஆர்) தெரிவித்துள்ளது.

2023-24 நிதியாண்டில் தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடை மற்றும் வருமான இனங்களிலும் பாஜக முதலிடத்தில் இருக்கிறது. 5 தேசியக் கட்சிகள் பெற்ற வருமானத்தில் பாஜக ரூ.4,340 கோடி நன்கொடை பெற்று முதலிடத்தில் இருக்கிறது என்று ஏடிஆர் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு அரசியல் கட்சியும் அதன் ஆண்டு வருமானம் மற்றும் செலவினம் குறித்த அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தன.  பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி, தேசிய மக்கள் கட்சி ஆகியவை தங்களின் ஆண்டு வருவாயா ரூ.2669.86 கோடி நன்கொடை மற்றும் பங்களிப்பாக வந்துள்ளது என தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க: திமுக ஆட்சியில்தான் முதன் முதலில் சிபிஎஸ்இ ஸ்கூல் வந்துச்சு.. உண்மையை உடைத்த பிஜேபி நாராயணன் ...!

அந்த அறிக்கையை பெற்று ஆய்வு செய்து ஏடிஆர் அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தேர்தல் மற்றும் பிரசாரத்துக்காக ரூ619.67 கோடி செலவு செய்துள்ளது, அதேசமயம், அந்த கட்சிக்கு கடந்த நிதியாண்டில் ரூ.1,225 கோடி வருமானம் ஈட்டியுள்ளது என்று தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த அதன் ஆண்டு வரவு செலவு அறிக்கையில்தெரிவித்துள்ளது.

இதில் பாஜக தேர்தல் செலவு மற்றும் நன்கொடை தவிர்த்து நிர்வாகச் செலவினங்கள் என்ற பெயரில் ரூ.349.71 கோடி செலவிட்டுள்ளது, காங்கிரஸ் கட்சி ரூ.340.70 கோடி செலவிட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிகபட்சமாக நிர்வாகச் செலவு, இதர செலவினங்களுக்காக ரூ.56.29 கோடியும், ஊழியர்களுக்கான செலவாக ரூ.47.57 கோடியும் செலவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதேசமயம், கடந்த நிதியாண்டில் மார்க்சிஸ்ட் கட்சி நன்கொடையாக ரூ.167.636 கோடி செலவிட்டுள்ளது.

இதில் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளின் வருவாயில் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளின் வருமானம் மட்டும் 43.36 சதவீதம், அதாவது ரூ.2,524.13 கோடி  தேர்தல் நிதிப்பத்திரங்கள் வாயிலாக பெற்றுள்ளன. பாஜக தேர்தல் நிதிப்பத்திரங்கள் வாயிலாக ரூ.1,685.62 கோடியும், காங்கிரஸ் கட்சி ரூ.828.36 கோடியும், ஆம் ஆத்மி கட்சி 10.15 கோடியும் நன்கொடை பெற்றுள்ளன. இதில் ஆம் ஆத்மி கட்சி மட்டும் கடந்த நிதியாண்டில் ரூ.22.68 கோடி வருமானம் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதிக்குள் அரசியல் கட்சிகள் தங்கள் வருவாய் செலவு கணக்குகளைத் தாக்கல் செய்ய கெடுவிதித்திருந்தது. இதில் பகுஜன் சமாஜ் மற்றும் ஆம்ஆத்மி கட்சி மட்டுமே சரியான நேரத்தில் தாக்கல் செய்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 12 நாட்களும், காங்கிரஸ் 53 நாட்களும், பாஜக66 நாட்களும் தாமதமாக தாக்கல் செய்தன.

பகுஜன் சமாஜ் கட்சி உத்தரப்பிரதேசத்திலும் பெரிதாக எம்எல்ஏக்களுடன் இல்லை, எந்த மாநிலத்திலும் ஆட்சியிலும் இல்லை, ஆனால் அந்தக் கட்சிக்கு கடந்த நிதியாண்டில் ரூ.64.77 கோடி நன்கொடை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 

இதையும் படிங்க: தமிழகத்தில் எட்டு எம்.பி. தொகுதிகள் குறைப்பா..? கொந்தளிக்கும் திமுக கூட்டணி கட்சி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share