வாட் ப்ரோ...இது ராங்க் ப்ரோ... விஜய்யை கலாய்த்த ப்ளூ சாட்டை மாறன்!!
அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்காததை சுட்டிக்காட்டி விஜய்யை ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார்.
தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யும்போது, தமிழ்நாடு எதிர்கொள்ளவிருக்கும் சிக்கல் குறித்து விவாதிக்க, தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை இன்று நடத்தியது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு 63 கட்சிகள் மற்றும் இயக்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி, பாஜக , தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதில் பங்கேற்கவில்லை. திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, மநீம , தவெக உள்ளிட்ட 56 கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றன.
இதில், தவெக சார்பில் விஜய் கலந்துகொள்ளாமல் அவருக்கு பதிலாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டார். எச். வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் படத்தில் விஜய் நடித்து வரும் நிலையில், பார்ட் டைம் அரசியல் வாதியாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. விஜய், அவ்வப்போது அரசியல் பேசுவதும் அலுவலகத்தில் இருந்து அரசியல் செய்வது வாடிக்கையாக வைத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் நாடகமாடுவது பாஜக-வா..? திமுக-வா..? அதிகாலையில் பரபரக்க வைத்த விஜயின் கடிதம்..!
இந்த நிலையில் தற்போது தொகுதிகள் மறுசீரமைப்பு குறித்த விவாதத்திற்கு வாரமல் இருந்தது மேலும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஜன நாயகன் படத்தை முடித்துவிட்டு முழு நேரமும் மக்கள் பணி செய்யப்போகிறேன் என அறிவித்திருந்த விஜய், கிடைக்கும் நேரங்களில் முக்கியமான அரசியல் சந்திப்புகளை நடத்தினாலும் அவர் politics from home என சில கட்சியினர் டிரோல் செய்து வருகின்றனர்.
அந்த வரிசையில் தற்போது விஜய்யை ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார். இதுக்குறித்த அவரது X தள பதிவில், "What bro?. This is wrong bro: 'தலைவா' பிரச்னைக்கு கொடநாட்டில் முதல்வரை பார்ப்பேன். ரெய்டு பிரச்னைக்கு கோவையில் பிரதமரை பார்ப்பேன். 'மாஸ்டர்' பிரச்னைக்கு கோட்டையில் முதல்வரை பார்ப்பேன். ஆனால்.. மக்களுக்காக பேச.. அனைத்துகட்சி மீட்டிங் போகாமல்.. ஷூட்டிங் போய்விடுவேன்" என அனைத்து கட்சி கூட்டத்துக்கு வராமல் படப்பிடிப்பிலே விஜய் பிசியாக இருப்பது ஏன் என ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: திமுகவுக்கு ஓகே சொன்ன விஜய்...எதுக்காக தெரியுமா?