×
 

பாய்லர் வெடித்து சிதறி தீ விபத்து.. துரித நடவடிக்கைகளால் உயிர் சேதம் தவிர்ப்பு..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தனியார் தீப்பெட்டி உற்பத்தி தொழிற்சாலையில் தீக்குச்சிக்கு மருந்து கலக்கும் பாய்லர் வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தனியார் தீப்பெட்டி உற்பத்தி தொழிற்சாலையில் தீக்குச்சிக்கு மருந்து கலக்கும் பாய்லர் வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து திருத்தங்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலநாச்சியாபுரம் பகுதியில் விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான தனியார் தீப்பெட்டி உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. தீப்பெட்டி உற்பத்தி பணியில் வழக்கம் போல தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக தீக்குச்சிக்கு மருந்து கலக்கும் பாய்லர் இயந்திரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக சிவகாசி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதையும் படிங்க: முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.. 50 வருடம் பின்னோக்கி சென்று விட்டதாக நெகழ்ச்சி..!

சம்பவம் இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். உடனடியாக பணியாளர்கள் வெளியேற்றப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் சேதமடைந்தன.‌ இந்த தீ விபத்து குறித்து திருத்தங்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மாயமான மாணவர் சடலமாக மீட்பு.. கொலையா..? தற்கொலையா..? என விசாரித்து வரும் போலீசார்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share