×
 

காத்திருக்க முடியாதா? ராகுல் காந்திக்கு பிரணாப் முகர்ஜி மகள் கேள்வி

காத்திருக்க முடியாதா என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் கடந்த மாதம் 26ம் தேதி காலமானார். அவர் உயிரிழப்புக்கு மத்திய அரசு 7 நாட்கள் துக்கம் அனுசரித்திருந்தது.ஆனால், மன்மோகன் சிங் காலமாகிய அடுத்த சில நாட்களில் ராகுல் காந்தி வியட்நாம் சென்றுவிட்டார். ராகுல் காந்தி புத்தாண்டு கொண்டாட வியட்நாம் சென்றதை பாஜகவும் கடுமையாக விமர்சித்தது. பாஜக செய்தித்தொடர்பாளர் ஷேசாத் பூணாவல்லா கூறுகையில் “ மறைந்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்கை அவமானப்படுத்தும் விதத்தில் அவர் காலமாகிய சில நாட்களிலேயே ராகுல் காந்தி புத்தாண்டு கொண்டாட வியட்நாம் சென்றுள்ளார். காங்கிரஸ் கட்சி மன்மோகன் சிங் பற்றி கவலைப்படவில்லை. அவரின் வாழ்நாள் முழுவதும் அவரை அவமானப்படுத்தியும், மனதைக் காயப்படுத்தியும் இருந்தது. மன்மோகன் சிங் உடல் எரியூட்டப்பட்டபின் அவரின் உடல் அஸ்தியை பெறுவதற்கு காங்கிரஸ் கட்சியின் எந்தத் தலைவரும் வரவில்லை” என்று குற்றம்சாட்டியிருந்தார்.


இந்நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி, ராகுல் காந்தியின் வியட்நாம் பயணம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அவர் இந்தியா டுடே தளத்துக்கு அளித்த பேட்டியில் “ காங்கிரஸ் கட்சியில் மாபெரும் தலைவராக இருந்தவர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமாகி நாடே 7 நாட்கள் துக்கத்தில் இருந்தது. ஆனால், அவர் காலமாகிய சில நாட்களில் ராகுல் காந்தி ஏன் வியட்நாம் சென்றார் என்று, நாட்டின் சராசரி குடிமகன், கவலைப்படக்கூடிய குடிமகன் கூட, இந்த கேள்வியை ராகுல் காந்தியிடம் கேட்க விரும்புவார்கள். ராகுல் காந்தி புத்தாண்டு கொண்டாட உடனடியாக வெளிநாடு செல்ல வேண்டுமா
மன்மோகன் சிங் மறைவுக்குப்பின் அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதலாக, பக்கபலமாக இருக்க வேண்டிய நேரம், காங்கிரஸ் கட்சியும், தலைவர்களும் அவரின் குடும்பத்துக்கு துணையாக இருக்க வேண்டும். 
என்னுடைய தந்தை காலமாகிய போது, எனக்கு தனிப்பட்ட முறையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் தொலைப்பேசியில் பேசி ஆறுதல், தெரிவித்தனர், வருத்தத்தை பகிர்ந்து கொண்டனர். அது கொரோனா தொற்று காலம் என்பதால் அவர்கள் வருகையை நான் எதிர்பார்க்கவில்லை, வராததும் நியாயமானதுதான்.


ஆனால், மன்மோகன் சிங் காலமாகிய நேரத்தில் கொரோனா பரவல் இருந்ததா, கட்டுப்பாடுகள் ஏதேனும் இருந்ததா. அப்படியிருக்கும்போது, மன்மோகன் சிங் இறுதிச்சடங்கின்போதும், அவரின் அஸ்தியை பெறும்போதும் ஏன் காங்கிரஸ் கட்சியிலிருந்து தலைவர்கள் யாரும் வரவில்லை. ராகுல் காந்தி ஏன் இந்த நேரத்தில் வெளிநாடு சென்றார், அவரால் வெளிநாடு செல்லாமல் காத்திருக்க முடியாதா, புத்தாண்டு கொண்டாட அவர் அவசரமாக வியட்நாம் செல்ல வேண்டுமா இதுபோன்ற துக்கமான நேரத்தில் அவர் ஏன் இப்படி நடந்து கொண்டார்”  இவ்வாறு ஷர்மிஸ்தா முகர்ஜி தெரிவித்தார்

இதையும் படிங்க: காங்கிரஸின் பொய் பிரச்சாரத்தை தவிடு பொடியாக்கிய பாஜக... மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் தயார்..!

இதையும் படிங்க: மன்மோகன் சிங் இறப்பில் அரசியல் ஆதாயம்... சீக்கியர்களிடம் சிண்டு முடியும் காங்கிரஸ்..? இறுமாப்புக்காட்டி இணங்கி வந்த பாஜக..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share