ஆண்ட பரம்பரை என சொல்லகூடாதா ..இதிலும் அரசியலா ..கடுகடுத்த சபாநாயகர் அப்பாவு..!
ஆண்ட பரம்பரை என சொல்லகூடாது என சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று அமைச்சர் மூர்த்திக்கு ஆதரவாக பேசியுள்ளளார் சபாநாயகர் அப்பாவு
நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் சட்டபேரவை தலைவர் அப்பாவு .அப்போது அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை அரசியலக்க கூடாது என குஷ்பூ சொன்ன கருத்தை வரவேற்கிறோம். அரசின் கவனத்திற்கு தவறு நடந்த விஷயம் சென்றவுடன் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை நடந்து வருகிறது. காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது நல்ல நியாயம் கிடைக்கும். தமிழக அரசு விருப்பு வெறுப்பில்லாமல் சட்டத்தின் ஆட்சியை நடத்தி வருகிறது. யார் தவறு செய்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் அரசு தமிழகத்தில் நடந்து வருகிறது என்றார்.
அமைச்சர் மூர்த்தி என்ன சூழலில் ஆண்ட பரம்பரை என்று பேசினார் என்பது தெரியவில்லை ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒவ்வொரு வரலாறு உண்டு என சொல்வார்கள் எங்கள் சமூகம் தான் நாட்டை ஆண்டது என சொல்வது வழக்கம் அதனை சொல்லக்கூடாது என சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. எந்த அடிப்படையில் மூர்த்தி பேசினார் என்பது தெரியவில்லை திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் எந்த குற்றமும் நடக்கவில்லை.இது போன்ற பேச்சை வைத்தாவது குற்றத்தை சுட்டிக்காட்டலாம் என சிலர் சொல்லி வருகிறார்கள் என்று அமைச்சர் மூர்த்திக்கு தனது ஆதரவை அப்பாவு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு . தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறைக்கு 44,042 கோடி நிதி ஒதுக்கி இருக்கும் நிலையில் அந்த நிதி எங்கு சென்றது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்கிறார் அண்ணாமலை மிகவும் படித்தவர் , தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி எங்கு சென்றது என ஆன்லைனில் பார்த்தால் புள்ளி விபரமாக அதில் இருக்கும் அதனை பார்த்துக் கொள்ளலாம் என்றும் அண்ணாமலையின் பேச்சுக்கு அப்பாவு பதிலடிகொடுத்தார்.
இதையும் படிங்க: நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம் ...நடுங்கிப்போனா நெல்லை வாசிகள்