×
 

மணிப்பூர் கலவரத்தில் காங்கிரஸின் பித்தலாட்ட அரசியல்... கொடூர வரலாற்றை நினைவூட்டி பங்கம் செய்த முதல்வர்..!

மணிப்பூரில் பர்மிய அகதிகளுக்கு மீண்டும் மீண்டும் குடியேற்றம் ஒப்பந்தம் போன்ற காங்கிரஸ் செய்த கடந்த கால பாவங்களால் தான், நீங்கள் உட்பட அனைவரும் இன்று மணிப்பூர் கொந்தளிப்பில் இருப்பதை அறிவீர்கள்.

மணிப்பூர் அமைதியின்மைக்கு ‘வருந்துகிறேன்’என்று காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷுக்கு பதிலடி கொடுத்த முதல்வர் பிரேன் சிங், முன்னாள் காங்கிரஸ் பிரதமர்கள் ஏன் மணிப்பூர் சென்று மன்னிப்பு கேட்கவில்லை என பதிலடி கொடுத்துள்ளார்.

முன்னாள் பிரதமர்களான பி.வி.நரசிம்மராவ், ஐ.கே.குஜ்ரால் ஆகியோர் கடந்த கால மோதல்களுக்கு மன்னிப்பு கேட்க மணிப்பூருக்கு சென்றனரா? என்று காங்கிரஸிடம் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் நேற்று வடகிழக்கு மாநிலத்தில் நிலவும் கொந்தளிப்புக்கு காங்கிரஸின் "கடந்தகால பாவங்கள்" காரணம், பர்மிய அகதிகள் மீண்டும் மீண்டும் குடியமர்த்தப்பட்டது உட்பட அனைத்தையும் கூறி அதிர வைத்துள்ளார்.

இதையும் படிங்க: ‘நடந்ததை மறந்துவிடுவோம்..!’ மக்களிடம் மன்னிப்பு கேட்ட மணிப்பூர் முதல்வர்..!


பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூருக்குச் சென்று பதற்றத்திற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்காதது ஏன் என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து பிரேன் சிங் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

நேற்று செய்தியாளர் சந்திப்பின் போது, ​​பிரேன் சிங், “மாநிலத்தில் நடந்த கலவரத்திற்காக நான் வருந்துகிறேன். பலர் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தனர். பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. அதற்காக நான் வருந்துகிறேன். மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்’’ எனத் தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ்தள பதிவில், “பிரதமர் ஏன் மணிப்பூருக்குச் சென்று மன்னிப்பு கேட்கக் கூடாது. மே 4, 2023 முதல் அவர் நாடு, உலகம் முழுவதும் ஜெட் விமானம் மூலம் செல்கிறார். ஆனால் மணிப்பூர் மாநிலத்திற்குச் செல்வதை அவர் வேண்டுமென்றே தவிர்த்து விட்டார். இந்த புறக்கணிப்பை மணிப்பூர் மக்களால் புரிந்து கொள்ள முடியாது’’ எனத் தெரிவித்து இருந்தார்.

ஜெய்ராம் ரமேஷின் பதிவிற்குப் பதிலளித்த பிரேன் சிங், “மணிப்பூரில் பர்மிய அகதிகளுக்கு மீண்டும் மீண்டும் குடியேற்றம் ஒப்பந்தம் போன்ற காங்கிரஸ் செய்த கடந்த கால பாவங்களால் தான், நீங்கள் உட்பட அனைவரும் இன்று மணிப்பூர் கொந்தளிப்பில் இருப்பதை அறிவீர்கள். இந்திய உள்துறை அமைச்சராக இருந்த போது ப.சிதம்பரம் தலைமையில் மியான்மரை தளமாகக் கொண்ட தீவிரவாதிகளுடன் ஒப்பந்தம்’’ செய்யப்பட்டது.

எனது மன்னிப்பு, இடம்பெயர்ந்த மக்களுக்கான வருத்தத்தின் உண்மையான வெளிப்பாடு. மன்னிப்பை வலியுறுத்துகிறேன்’’ என பிரேன் சிங் தெளிவுபடுத்தினார்.


“இன்று நான் கூறிய மன்னிப்பு, இடம்பெயர்ந்து வீடற்றவர்களாகிவிட்ட மக்களுக்காக எனது வருத்தத்தை வெளிப்படுத்தும் நேர்மையான செயலாகும். ஒரு முதலமைச்சராக, நடந்ததை மன்னிக்கவும் மறக்கவும் வேண்டுகோள். இருப்பினும், நீங்கள் அதில் அரசியலைக் கொண்டு வந்தீர்கள்.

நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். மணிப்பூரில் நாகா-குகி மோதல்களில் சுமார் 1,300 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். வன்முறை பல ஆண்டுகளாக நீடித்தது. 1992, 1997 க்கு இடையில் அவ்வப்போது அதிகரிப்புகள் நிகழ்ந்தன. இருப்பினும் மோதலின் மிகவும் தீவிரமான காலம் 1992-1993 ஆகும். மோதல்கள் 1992 ல் தொடங்கி சுமார் ஐந்து ஆண்டுகள் (1992-1997) வெவ்வேறு தீவிரங்களில் தொடர்ந்தன. இந்த காலகட்டம் வடகிழக்கு இந்தியாவில் இரத்தக்களரி இன மோதல்களில் ஒன்றாகும். இது மணிப்பூரில் உள்ள நாகா - குக்கி சமூகங்களுக்கு இடையிலான உறவுகளை ஆழமாக பாதித்தது” என்று முதலமைச்சர் பிரேன் சிங் கூறினார். 

அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த முன்னாள் பிரதமர்கள் பி.வி. நரசிம்மராவ் மற்றும் ஐ.கே. குஜ்ரால் ஆகியோர் மணிப்பூருக்குச் சென்று கடந்த கால மோதல்களுக்கு மன்னிப்பு கேட்கிறார்களா? என்று பிரேன் சிங் கேள்வி எழுப்பினார்.

“1991 முதல் 1996 வரை இந்தியப் பிரதமராகப் பணியாற்றியவரும் இந்தக் காலத்தில் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்தவருமான ஸ்ரீ பி.வி.நரசிம்ம ராவ் மன்னிப்பு கேட்க மணிப்பூருக்கு வந்தாரா? குகி-பைட் மோதல்கள் மாநிலத்தில் 350 உயிர்களைக் கொன்றன. பெரும்பாலான குக்கி-பைட் மோதல்களின் போது (1997-1998), ஸ்ரீ ஐகே குஜ்ரால் இந்தியாவின் பிரதமராக இருந்தார். 

அவர் மணிப்பூருக்குச் சென்று மக்களிடம் மன்னிப்புக் கேட்டாரா? மணிப்பூரில் உள்ள முக்கியப் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வதற்குப் பதிலாக, காங்கிரஸ் ஏன் எல்லா நேரத்திலும் அரசியல் விளையாட்டு காட்டுகிறது’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

மே 3, 2023 முதல், மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மெய்தி சமூகத்தினரிடையே இன மோதல்களால் பிளவுபட்டுள்ளது.

இதையும் படிங்க: ‘எங்களுக்கு துக்கம் இருக்குங்க உங்களப்போல் இல்ல’…திமுக மீது கடுப்பான செல்வப்பெருந்தகை; அதிர்ச்சியில் அரசு அதிகாரிகள்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share