×
 

எக்ஸ்டிரா வேலை வாங்கிய பாஸ்...கடுப்பான ஊழியருக்கு செய்த தரமான சம்பவம்!!

டெல்லியில் வார இறுதி நாட்களில் வேலை செய்ய முடியாது என கூறிய ஊழியரை அந்த நிறுவனத்தின் முதலாளி திட்டிய சம்பவம் வைரலாகி வருகிறது. 

டெல்லியில் வார இறுதி நாட்களில் வேலை செய்ய முடியாது என கூறிய ஊழியரை அந்த நிறுவனத்தின் முதலாளி திட்டிய சம்பவம் வைரலாகி வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடங்கிய டீ கடை வரை ஊழியர்களின் உழைப்பை சுரண்டுவது நடந்தேறி வருகிறது. ஒரு நாளைக்கு ஒரு பணியாளர் 8 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என்பது சட்டம் சொல்வது.

ஆனால் சில நிறுவனங்கள் அந்த நேரத்தையும் தாண்டி 10 மணி நேரம், 12 மணி நேரம் வரை வேலை வாங்குகின்றன. வார விடுமுறையில் கூட பணியில் இருக்கும் சூழலையும் சிலர் சந்தித்துள்ளனர். 
அப்படி ஒரு சம்பவம் தான் டெல்லியில் நிகழ்ந்துள்ளது. தற்போது சில நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களின் பணி அனுபவங்கள், அதன் பிரச்சனைகளை பகிரங்கமாக வெளியே சொல்லி விடுகின்றனர்.

ரெடிட் வலைதள பக்கத்தில் ஒருவர் தனது பணி அனுபவத்தை, அவருக்கு நிகழ்ந்த பிரச்சனையையும் கூறியுள்ளார். அந்த நபர் டெல்லியில் உள்ள மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கும், நிறுவனத்தின் ஓனருக்கும் நடந்த உரையாடலை பகிர்ந்துள்ளார். அதாவது அந்த நபர் மார்கெட்டிங் நிறுவனத்தில் கடந்த டிசம்பர் மாதம் பணிக்கு சேர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: டெல்லியை கையில் எடுத்த அமித்ஷா..! கிரிமினல்களை தெறிக்கவிட முடிவு..!

வீடியோ எடிட்டராக பணிக்கு சேர்ந்த அவருக்கு நிறுவனத்தின் தரப்பில் நெருக்கடி கொடுத்துள்ளனர். ஒரு வீடியோவை 55 நிமிடங்கள் எடிட் செய்து கொடுத்துள்ளார். அதில் சில மாற்றங்களை செய்ய சொல்லியுள்ளனர். அதனால் இரவு 8.30 மணி வரை நேரம் எடுத்துள்ளது. இதனால் ஆந்த நபர் இவ்வளவு நேரம் இருந்து பணியாற்றியதால் வாரத்தின் இறுதி நாள் வேலைக்கு வர மாட்டேன் என்று கூறியுள்ளார்.

இதனால் கடுப்பான அந்த நிறுவனத்தின் ஓனர், ஊழியரை தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். வீக்கெண்டில் பணி செய்ய மாட்டேன் என அந்த ஊழியர் மீண்டும் சொன்னதும் கடைசியில் வேலையை விடும் நிலை ஏற்பட்டது. தனக்கும் பாஸ்க்கும் நடந்த உரையாடலை அவர் இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதனால், அந்த பாஸை நெட்டிசன்ஸ் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: டெல்லி சபாநாயகராக விஜேந்தர் குப்தா தேர்வு... 6 மொழிகளில் எம்எல்ஏக்கள் பதவியேற்பு.. முதல் நாளிலேயே அமளி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share