×
 

டெல்லியில் 3-வது முறையாக ஆட்சியைப் பிடிக்குமா ஆம் ஆத்மி? கடும் போட்டியில் பாஜக - காங்கிரஸ்

பாஜக, காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில் டெல்லி தேர்தலில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிப்பது கடுமையான சவாலாக விளங்கி வருகிறது.

டெல்லி சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில், அங்கு பிரசாரம் உச்ச கட்டத்தை எட்டி இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சியில் இருக்கிறது. கடந்த 1998 முதல் டெல்லியில் ஆட்சியில் இல்லாத பாஜக நாட்டின் தலைநகரில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பலமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அடுத்து காங்கிரசும் கடுமையான போட்டியை கொடுத்து வருகிறது. 2013-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மிடம்தனது அதிகாரத்தை இழந்தது. தற்போது ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் இழந்த இடத்தை மீட்க போராடி வருகிறது. 

10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி அதன் கல்வி மற்றும் சுகாதார திட்டங்கள், இலவச மின்சாரம் மற்றும் குடிதண்ணீருடன் , கடந்த இரண்டு தேர்தல்களில் முறையே 67 மற்றும் 62 இடங்களை கைப்பற்றி அதிசயத்தை நிகழ்த்தியது. பெண்களுக்கான இலவச பஸ் பயணங்கள் கூட டெல்லி வாக்காளர்கள் மத்தியில் அவர்களுக்கான கணிசமான ஆதரவை தக்க வைத்துக் கொள்ள உதவியது.

இதையும் படிங்க: கூட்டணி ஆட்சி தான்.! வீடு வீடா போங்க.. மீண்டும் உறுதி செய்த த.வெ.க விஜய்!

இந்த முறை மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தகுதி உள்ள அனைத்து பெண் வாக்காளர்களுக்கும் மாதம் 2500 ரூபாய் வழங்கப்படும் என்று அந்த கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. ஏற்கனவே தனது வாக்குறுதிகளை நிறைவேற்றி இருப்பதால் வாக்காளர்கள் மத்தியில் குறிப்பாக பெண்கள் மத்தியில் கஜினிவால் பற்றிய நம்பிக்கை வலுவாக இருக்கிறது.

 பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் ஒரே மாதிரியான வாக்குறுதிகளை அளித்திருக்கின்றன. இதனால் இலவசங்களை பொறுத்தவரை ஆம் ஆத்மி தனது தனித்துவத்தை இழந்து விடுகிறது. 

மாசுபட்ட நீர் மற்றும் மோசமான சாலை நிலைமைகளால் பல வாக்காளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் அத்துடன் ஆம் ஆத்மி கட்சியின் பல்வேறு தலைவர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்கொண்டு வருகிறார்கள். எனவே எதிர் கட்சிகளின் ஆக்ரோஷமான வாக்குறுதிகளின் கலவை ஆம் ஆத்மி கட்சிக்கு கடுமையான சவாலாக விளங்கி வருகிறது 

இந்த தேர்தலில் பாஜக தனது வழக்கமான பலத்தை மட்டும் நம்பி இருக்காமல் ஆம் ஆத்மி கட்சியின் கோட்டையாக விளங்கும் பகுதிகளை உடைக்கவும் வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறது. பாஜக தொண்டர்கள் மற்றும் சங் பரிவார் அமைப்புகள் மூலம் அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகள் பகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 பல்வேறு வாக்காளர் பிரிவுகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்ட போதிலும் கெஜ்ரிவாலை எதிர்கொள்வதற்கான நம்பகமான தலைமை அந்த கட்சியில் இல்லை. மூத்த தலைவர்களை பல்வேறு தொகுதிகளில் நிறுத்திய போதிலும் அவர்களில் யாரையும் முதல்வர் வேட்பாளராக கட்சி முன் நிறுத்தவில்லை. 

மாநிலக் கட்சித் தலைவர்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடு அந்த கட்சிக்கு மிக கவலை அழிப்பதாக உள்ளது. இதனால் தான் டெல்லியை வெல்வதில் பலமுறை பாஜக தோல்வி அடைந்தது. அத்துடன் பல தொகுதிகளில் வேட்பாளர்கள் கூட பலம் வாய்ந்தவர்களாக கருதப்படவில்லை. 

கடந்த இரண்டு தேர்தல்களில் தோல்வியை தழுவிய காங்கிரஸ் இந்த தேர்தலில் ஜீவ மரண போராட்டம் நடத்தி வருகிறது. குறிப்பாக சிறுபான்மை மற்றும் தலித் பகுதிகளில் இழந்த வாக்காளர் தளத்தை மீட்டு எடுக்க கடுமையாக காங்கிரஸ் தொண்டர்கள் உழைத்து வருகிறார்கள். இருப்பினும் ஆம் ஆத்மி மற்றும் பாஜகவுக்கு சாத்தியமான மாற்றாக அது விளங்கும் என வாக்காளர்களை நம்ப வைப்பதற்கு இன்னும் தீவிரமாக அந்த கட்சி செயல்பட வேண்டும். 

கடந்த தேர்தலில் காங்கிரஸின் வாக்கு பங்கிட்டு விகிதம் வெறும் 4.5% ஆக தான் இருந்தது. எனவே கூடுதல் இடங்களை வெல்வது அந்த கட்சிக்கு பெரிய சவாலாக தான் இருக்கும் என்பதை அவர்களுடைய ஆதரவாளர்கள் கூட ஒப்புக்கொள்கிறார்கள். ஆதரவாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் நம்பிக்கை இன்மை கூட இந்த தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு பாதகமாக அமையலாம். 

எது எப்படி இருப்பினும், முந்தைய தேர்தல்களை விட வெற்றி பெறும் இடங்களின் எண்ணிக்கை சற்று குறைவாக இருந்தாலும், மூன்றாவது முறையாக ஆம் ஆத்மி கட்சியின் கெஜ்ரிவாலுக்கு த்தான் டெல்லி மக்கள் முடி சூட்டுவார்கள் என்பது தான் வாக்காளர் மத்தியில் பரவலான கருத்தாக இருந்து வருகிறது.
 

இதையும் படிங்க: பட்ஜெட் 2025: ஜன்னல், தாடி, மெழுகு வர்த்தி, ஏன்....'பேச்சலர்' வாழ்க்கைக்கும் வரி; சுவாரஸ்ய தகவல்கள்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share