நாளை பார்லிமென்ட்., இன்று எம். பி.க்கள் கூட்டம்! முதல்வரின் புதிய ரூட்!
மக்களவை தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் ஏற்படும் பாதிப்புகள், மும்மொழி கொள்கை பிரச்சனை தொடர்பாக விவாதிக்க முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறுகிறது.
இந்தியாவில் அதிகரித்துள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப அடுத்த ஆண்டு (2026) நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளன. இது மக்கள்தொகை உயர்வை கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ்நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகள் 31 ஆக குறைய வாய்ப்பு இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.
மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுவரையறை செய்தால், மாநிலத்தின் பிரதிநிதித்துவம் குறையும் என்று தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே மார்ச் ஐந்தாம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அமித் ஷா வைத்த செக்..! தமிழில் பொறியியல், மருத்துவப் படிப்புகள் இருக்கிறதா..? உண்மை நிலை என்ன..? கேள்விகளும் விளக்கங்களும்..!
இந்த நிலையில் நாளை பாராளுமன்றம் கூட உள்ள நிலையில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக பேச இன்று இன்று திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி அரங்கில் கூட்டம் நடைபெறுகிறது. மொழிக் கொள்கை பிரச்சனை, தொகுதி மறு சீரமைப்பு முடிவு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் எம்பிக்களை முக்கிய அறிவுரைகளை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தி.மு.க. எம்.பி.க்களின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும்,எந்தெந்த பிரச்சினைகள் குறித்து பேச வேண்டும் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: ரூ.72 கோடியில் 7 மாவட்டங்களில் தோழி விடுதிகள்... மகளிர் தினத்தையொட்டி முதலமைச்சர் அறிவிப்பு..!