×
 

ரெய்டில் வசமாகச் சிக்கிய திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன்: சிக்கிய ஆதாரங்கள்- கொத்தாக அள்ளிய ED ..!

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் அலுவலகங்களில் அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனையில் ஆவணங்களில் குளறுபடி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது 

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் அலுவலகங்களில் அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனையில் ஆவணங்களில் குளறுபடி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது 

திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுடைய “அக்கார்டு டிஸ்டில்லர்ஸ் & ப்ரூவர்ஸ் பிரைவேட் லிமிடெட்”  என்ற மதுபான ஆலையுடைய அலுவலகமாகும். இந்த அலுவலகத்தில் தான் இன்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட நான்கு அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் இரண்டு சிஆர்பிஎஸ் அதிகாரிகள் வந்து அலுவலகத்திற்குள் சென்று சோதனை நடத்தி வருகின்றனர். இந்த அலுவலகத்தில் நடக்கக்கூடிய சோதனையானது, கிட்டத்தட்ட ஒரு மூன்று மணி நேரமாக நடந்து வருகிறது. இந்த அலுவலகத்தில் தான் தமிழ்நாடு டாஸ்மார்க்கிற்கு தமிழ்நாடு டாஸ்மார்க்கிற்கு மதுபானங்களை சப்ளை செய்யும் கணக்கு வழக்குகள் உள்ளன. 

இந்த நிறுவனத்திலிருந்து வாங்கப்படக்கூடிய மதுபானங்கள் அனைத்துமே டாஸ்மார்க்கில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக அமலாக்கத்துறைக்கு கிடைத்த தகவலின் படி, தமிழ்நாடு அரசும், ஜெகத்ரட்சகனுச் சொந்தமான மதுபான ஆலைக்கும் இடையே ஒப்பந்தம் உள்ளது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் டாஸ்மாக் கடைகளுக்கான கொள்முதல் நடைபெற்று வருகிறது.  

இதையும் படிங்க: திமுக., எம்.பி-யின் அண்டப்புளுகு..! ' ஜனாதிபதி தாழ்த்தப்பட்டவர் என்பதால் கும்பமேளாவில் அனுமதிக்கவில்லை..?

இதனிடையே, டாஸ்மாக்கிற்கு என்னெவெல்லாம் விற்பனை செய்யப்பட்டது, அதன் விலை என்ன உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் அமலாக்கத்துறை வசம் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த ஆவணங்களின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், அமலாக்கத்துறை ஆவணத்திற்கும், நிறுவனத்திற்கும் ஆவணத்திற்கும் கணக்கில் குளறுபடி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த குளறுபடிகள் அனைத்துமே தற்போது நடந்த சோதனையின் மூலமாக தெரியவந்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜெகத்ரட்சகனின் மதுபான ஆலையில் இருந்து தான் மாத மாதம் டாஸ்மார்கிற்கு அதிக அளவிலான மதுபானங்கள் சப்ளை செய்யப்பட்டு வருவதாகவும், மற்ற கம்பெனிகளை விட இந்த கம்பெனி தான் அதிக அளவில் லாபம் ஈட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. 

அதுமட்டுமின்றி அந்த துறை சார்ந்த அமைச்சர்களுக்கும் இந்நிறுவனம்  கமிஷன் அடிப்படையில் பணம் கொடுத்து வருவதாகவும் அமலாக்கத்துறை சோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல எஸ்என்ஜே கால்ஸ் போன்ற போன்ற மதுபானம் ஆலையுடைய அலுவலகத்திலும் சோதனையானது நடைபெற்று வருகிறது. இருப்பினும் ஜெகத்ரட்சகனின் மதுபான ஆலை நிறுவனத்தில் இருந்து கைப்பற்றப்படும் ஆவணங்களைக் கொண்டு இன்னும் பல மதுபான ஆலைகளில் சோதனை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேலும் தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்யும் மதுபானங்களில் குறித்த தகவல்களிலும் முறைகேடு செய்யப்பட்டிருப்பதை அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளதாகவும், இரவு முழுவதும் அமலாக்கத்துறையினர் தொடர் சோதனை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 

இதையும் படிங்க: வெயிட்டிங் பார் 302..? இன்ஸ்டா ரீல்ஸால் சிக்கிய சிறுவர்கள்.. கொலைக்கு திட்டம் தீட்டியது அம்பலம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share