பிரசவ வலி எப்படி இருக்கும் தெரியுமா? காதலனுக்கு செயற்கை பிரசவ வலியை வழங்கிய காதலி.. உடல்நிலை மோசமாகி சிகிச்சை பெறும் காதலன்..
சீனாவில் செயற்கையாக 3 மணி நேரம் பிரசவ வலியை அனுபவித்த வாலிபரின் சிறுகுடல் சேதமடைந்த நிலையில் அறுவை சிகிச்சை மூலம் சேதமடைந்த சிறுகுடல் அகற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவின் ஹெனானில் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது காதலனை தனது தாய் மற்றும் சகோதரிக்கு அறிமுகம் படுத்தி உள்ளார். விரைவில் இருவரின் திருமணம் நடப்பதாக நிச்சயதார்த்தமும் நடந்தது. இந்நிலையில் அந்த இளம்பெண்ணின் தாய் மற்றும் சகோதரிக்கு அவருக்கு வித்தியாசமான ஒரு யோசனையை தந்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு பெண்கள் அனுபவிக்கும் மிக கொடுமையான பிரசவ வலியை உணர்ந்த எந்த ஆணும், ஒரு பெண்ணை தவறாக நடத்த மாட்டான். அதனால் உன் காதலனுக்கும் அந்த வலியை கொடு. அப்போது தான் நீ எவ்வளவு வலியை அவனுக்காக தாங்க போகிறாய் என்பதை அவன் உணர்ந்து உன்னை அன்போடு பார்த்துக்க்கொள்வான் என பேசி உள்ளனர்.
தாய் மற்றும் சகோதரியின் பேச்சை அப்படியே நம்பிய அந்த பெண்ணும், இதுகுறித்து காதலனிடம் தெரிவித்துள்ளார். முதலில் மறுத்த காதலனும், பின்னர் காதலியின் தொடர் வற்புறுத்தலால் அதை ஏற்றுக்கொண்டுள்ளார். இருவரும் செயற்கையாக பிரசவ வலியை ஏற்படுத்தும் மையங்களில் விசாரித்து ஒரு மையத்தை தேர்ந்தெடுத்து உள்ளனர். அங்கு காதலனுக்கு பிரசவ வலியை ஏற்படுத்துவது என முடிவானது. அப்போது இளம்பெண், தனது சகோதரியுடன் அங்கு வந்தாள். காதலனும் அதற்கான படுக்கையில் படுத்ததும் அவரது வயிற்றில் சில பெல்டுகள் மற்றும் வயர்கள் மாற்றப்பட்டன. கொஞ்சம் கொஞ்சமாக அதன் வழியே மின்சாரம் செலுத்தப்பட்டு, பிரசவத்தின் போது பெண்கள் உணரும் அளவிலான வலி தரும்படி செய்யப்பட்டது.
இதையும் படிங்க: கர்ப்பமாக்கி ஏமாற்றிய காதலன் கொலை.. இருமல் மருந்தில் பூச்சிமருந்து கலந்து கொன்ற காதலி.. உள்ளாடைகளிலும் தெளித்து பழிவாங்கல்..!
படிப்படியாக 90 நிமிடங்கள் வரை அந்த காதலனுக்கு பிரசவத்தின் தீவிரம் அதிகரிக்கப்பட்டது. நிலை 8ஐ கடந்ததும் அவரது காதலன் வலியால் கத்ததுவங்கி உள்ளார். ஆனாலும் தொடர்ந்து வலியின் தீவிரத்தை அதிகரித்துள்ளனர். நிலை 10, 12 ஐ கடந்த போது அதிகமாக வியர்த்து, காதலனுக்கு மூச்சிறைத்துள்ளது. மேலும் 90 நிமிடங்கள் அந்த நிலையிலேயே அவருக்கு பிரசவ வலி கொடுக்கப்பட்டுள்ளது. 3 மணி நேரம் நீடித்த சோதனை முடிந்ததும், காதலன் படுக்கையிலேயே மயங்கிசரிந்துள்ளார். அவரது வயிற்றுப்பகுதி மிக கடினமானதாக மாறியதாக கூறப்படுகிறது. சிகிச்சை முடிந்து காதலன் வீடு திரும்பிய நிலையில், கடுமையான அடி வயிற்று வலியால் துடித்துள்ளார்.
அடுத்த ஒரு வாரத்தில் அவரது உடல்நிலை மோசமானது. தொடர்ச்சியான வாந்தி மற்றும் வயிற்று வலியால் துடித்த அவரை, அவரது பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது அவரது சிறுகுடலின் ஒரு பகுதி மீளமுடியாத அளவுக்கு சேதமடைந்திருப்பதை டாக்டர்கள் கண்டறிந்தனர். அதை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். வாலிபரின் தாய் கண்ணீரோடு அதற்கு சம்மதித்தார். வாலிபரை பார்க்க வந்த அவரது காதலியை விரட்டிய தாய், இதுகுறித்து வழக்கு தொடர உள்ளதாகவும் எச்சரித்துள்ளார். மேலும் அவர் தங்களது நிச்சயதார்த்தத்தையும் ரத்து செய்துவிட்டதாகவும் அந்தப் பெண் கூறினார்.
பின்னர் தனது காதலனின் சிறுகுடலின் ஒருபகுதி அகற்றப்பட்டதாக தனக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், அவர் குணமடையும் வரை நான் முழுப் பொறுப்பையும் ஏற்கத் தயாராக இருக்கிறேன் என்றும் அப்பெண் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணின் இந்த பதிவிற்கு பல்வேறு கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்துள்ளன. இந்த சம்பவம், சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தைத் தூண்டியது. வழக்கமான பிரசவ வலி அதிகபட்சம் 10 நிமிடங்கள் நீடிக்கும். இந்த காதலியும் அவரது குடும்பத்தினரும் பைத்தியம் பிடித்தவர்களாகத் தெரிகிறார்கள் என நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு துரோகம்... உளவு பார்க்க மாலத்தீவுடன் சீனா போட்ட ஒப்பந்தம்..!