ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: எட்டித்தொட முடியாத உயரத்தில் திமுக; ஏக்கப் பெருமூச்சில் நாதக!
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பெருவாரியான வாக்குகள் முன்னிலையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலை வகித்து வருகிறார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பெருவாரியான வாக்குகள் முன்னிலையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலை வகித்து வருகிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான 67.97 சதவீத வாக்குகள் 14 மேஜைகளில் 17 சுற்றுகளாக எண்ணப்படவுள்ளன.வாக்கு எண்ணும் மையத்தில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 76 சிசி டிவி கேமராக்கள் மூலம் வாக்கு எண்ணிக்கை மையம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு இடைத்தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக ஆகிய முக்கிய கட்சிகள் புறக்கணித்த நிலையில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிவித்தது. திமுக சார்பில் ஏற்கனவே ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த சந்திரகுமார் களமிறக்கப்பட்டார். நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிட்டார். அதிமுக, பாஜக, தேமுதிக தேர்தலை புறக்கணித்ததால் அந்த கட்சியினரின் வாக்குகள் அனைத்தும் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கும் எனக்கூறப்பட்ட நிலையில், நாதக வேட்பாளர் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கை தொடங்கியதுமே சலசலப்பு... நாதக வேட்பாளர் திடீர் வாக்குவாதம்...!
தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே திமுக வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலை வகித்து வருகிறார். தபால் வாக்குகளில் திமுகவுக்கு 197 வாக்குகள் கிடைத்தன.நோட்டாவுக்கு 18-ம் நாம் தமிழர் கட்சிக்கு 13 வாக்குகளும் கிடைத்தன. தற்போதைய நிலவரப்படி திமுக வேட்பாளர் சந்திரகுமார் 30,182 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 6,122 வாக்குகளும் பெற்றுள்ளனர். நாதக வேட்பாளரை விட 24,060 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார். இதனால் அண்ணா அறிவாலயத்தில் திமுக உடன்பிறப்புகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஈரோட்டில் பெரும் பின்னடைவு… டெபாசிட்டை இழக்கும் நாதக வேட்பாளர்..? மில்கிபூரில் பாஜக படுஜோர்..!