×
 

குடித்துவிட்டு தகராறு செய்த தந்தை.. பெல்ட்டால் அடித்து கொன்ற மகன்.. தாய் கொடுத்த புகாரில் போலீசார் விசாரணை..!

சென்னை, திரு.வி.க.நகரில் குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்ட தந்தையை, மகன் பெல்டால் தாக்கியதில் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

சென்னை திரு.வி.க நகர் காமராஜர் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் சேகரன். (வயது 72). இவர் ஓய்வு பெற்ற தலைமை காவலர். இவரது மனைவி ராஜேஸ்வரி. (வயது 55). இவர்களுக்கு தினகரன் (வயது 23) என்ற மகன் உள்ளார். ஓய்வு பெற்ற காவலரான சேகரன், மதுவுக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இதனால் சேகரன் மற்றும் அவரது மகன் தினகரன் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு இருந்து வந்துள்ளது. 

இந்நிலையில் கடந்த 7ம் தேதி இரவு சேகரன் வீட்டிற்கு குடித்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது. போதையில் சேகரன் வீட்டில் பிரச்னை செய்துள்ளார். இதன் காரணமாக நள்ளிரவு 1 மணி அளவில் குடிபோதையில் வீட்டில் பிரச்சனை செய்து கொண்டிருந்த சேகரனை அவரது மகன் தினகரன் கண்டித்துள்ளார்.  அப்போது இருவருக்கும் இடையே வாய்  தகறாறு ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த தினகரன் வீட்டிலிருந்த பெல்ட்டை எடுத்து சேகரன் முகத்தில் ஓங்கி தாக்கியுள்ளார். இதில் சேகரன் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: 9வது மாடியில் இருந்து குதித்த ஆசிரியை... காரணத்தை கேட்ட போலீஸ்க்கு அதிர்ச்சி!!

படுகாயமடைந்து சரிந்து விழுந்த சேகரனை அவரது மனைவி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு  சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு ஒரு வாரகாலமாக சேகரன் சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாமல் கவலைக்கிடமாக இருந்து வந்தது. இதற்கிடையே இது குறித்து சேகரனின் மனைவி ராஜேஸ்வரி திருவிக நகர் காவல் நிலையத்தில் கடந்த 11 ஆம் தேதி  புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருவிக நகர்  போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து  தினகரனை கைது செய்தனர்.

அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சேகரன் நேற்று இரவு 12 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றினர். சிறையில் உள்ள சேகரனின்  மகன் தினகரன் மீது திரு வி க நகர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். மதுபோதையில் தகராறு செய்த தந்தையை மகனே அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: மின்சார ரயில் சேவை ரத்து! எந்தெந்த பகுதிகள் என தெரிஞ்சுக்கோங்க மக்களே...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share